ஆண் பெண் என்ற வித்தியாசம் இன்றி அனைவருக்கும் தங்கள் தலைமுடியின் மீது அலாதி பிரியம் இருக்கும். தலை முடியை நீளமாக வளர்ப்பதும். அதனை ஆரோக்கியமாக பாதுகாப்பதும் அவசியமானது. இதற்காகவே பலர் பலவிதமான ஹேர்கேர் ப்ராடக்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இதுபோன்ற ப்ராடக்டுகளை தேர்ந்தெடுக்கும் போது மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும்.. அதில் ஒன்றுதான் ஸ்கால்ப் சீரம். இந்த ஸ்கால் சீரம் தலைமுடி சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படாமலும், ஏற்கனவே உள்ள பிரச்சனைகளை சரி செய்யவும் பயன்படுகிறது. நீங்கள் சரியான ஸ்கால்ப் சீரம் பயன்படுத்தினாலே மற்ற ஹேர் கேர் ப்ராடக்டுகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது.
சரியான அளவில் கலக்கப்பட்ட வேதிப்பொருட்கள்: ஸ்கால்ப் சீரம் பயன்படுத்தப்படும வேதிப்பொருட்கள் அனைத்துமே ஃபார்முலாவின் அடிப்படையில் மிகச் சரியான அளவீட்டில் கலந்து சருமம் மற்றும் தலைமுடியை பாதுகாப்பது பொருட்டு உருவாக்கப்படுகிறது. மேலும் சில ஸ்கால்ப் சீரம் குறிப்பிட்ட சில பிரச்சனைகளுக்காக வேறு வித ஃபார்முலாக்களை பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. மேலும் இவை உருவாக்கத்திற்கு பல பிற ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு அதன் பிறகு உருவாக்கப்படுகிறது. இதன் காரணமாக பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாமலும் எதிர்பார்த்த ஆரோக்கியமான தலை முடி வளர்ச்சியும் உண்டாகும்.
தலைமுடியின் வேர் பகுதிகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது: இது தலைமுடியின் வேர் பகுதியை வலுவாக்குவதில் அதிக கவனம் செலுத்துகிறது. ஸ்கால்ப் சீரம் நேரடியாக தலைமுடியின் வேர் பகுதிகளில் அப்ளை செய்யப்படுவதால் சரும வறட்சி போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் அவை சரி செய்யப்படுகின்றன. இதனால் தலைமுடியின் வேர் பகுதி வலுவூட்டப்பட்டு அதிலிருந்து வளரும் தலைமுடியும் மிகவும் ஆரோக்கியமாக வளர்கிறது.
தலைமுடி பளபளப்பை அளிக்கிறது: பலரும் தன்னுடைய தலை முடியை பளபளப்பாக வைத்துக் கொள்வதற்கு பல பலவித ப்ராடக்டுகளை மாற்றி மாற்றி பயன்படுத்துவார்கள். இவை தலை முடியை ஆரோக்கியமாக்குவதற்கு பதிலாக மென்மேலும் அதிக பிரச்சனைகளை உண்டாக்குகின்றன. இதற்கு பதிலாக சரியான ஸ்கால்ப் சீரம் பயன்படுத்தும் போது தலைமுடி பளபளப்பாகவும், மென்மையாகவும் அதிக வலிமையுடனும் காணப்படும். அதைத் தவிர வறட்சியான சருமம் சேதம் அடைந்த வேர்க்கால்கள் ஆகியவற்றையும் இது சரி செய்கிறது.
ஆரோக்கியமான தலைமுடி: தலைமுடியின் தோற்றம் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் தலைமுடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது ஆகும். உங்களது தலை முடி ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்க விரும்பினால் சரியான ஸ்கால்ப் சீரம் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக தலைக்கு குளித்த பிறகு சரியான ஸ்கால்ப் சீரம் பயன்படுத்தும் போடும்போது தலைமுடி ஆரோக்கியமாக வளரும்.
பொடுகிலிருந்து விடுதலை: தலை முடி சரியாக வளராமல் இருக்க முக்கிய காரணம் தலையில் உண்டாகும் பொடுகுகள் ஆகும். தலையில் சருமத்தின் அதிக வறட்சி ஏற்படுவதும் குளிர் காலங்களிலும் பொடுகுகள் அதிக அளவில் உருவாகின்றன. ஆரம்பத்தில் சிறிய அளவில் ஆரம்பித்து பின் அதிக அளவில் தலைமுடி உதிர்வை இவை ஏற்படுத்தும். வரட்சியான சருமத்தை போலவே அதிக எண்ணெய் பசையும் தலையில் பொடுகு உண்டாவதை அதிகரிக்கிறது. இவை அனைத்திற்கும் ஸ்கால்ப் சீரம் சரியான ஒரு தீர்வை வழங்குகின்றன. அதிக தரமுடைய ஸ்கால்ப் சீரமை பயன்படுத்தும் போது அவை பொடுகுகள் ஏற்படுவதை கட்டுப்படுத்தி தலைமுடி உதிர்வதையும் குறைக்கிறது.