நம்முடைய சருமம் எப்போதும் அழகாக மற்றும் பளபளப்புடன் இருக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பான ஒன்று. இந்நேரத்தில் முகத்தில் சிறிய பருக்கள் ஏற்பட்டாலே முகத்தின் அழகு கெட்டுவிட்டதே? என்ற வருத்தம் ஏற்படும். அதிலும் அதுவே மாறாத கரும்புள்ளிகள் மற்றும் கருந்திட்டுகள் வந்துவிட்டாலே சொல்லவா வேண்டும்? நிச்சயம் முகத்தின் அழகு கெட்டுவிட்டதே என்ற மன உளைச்சல் ஏற்படும்.. முதலில் ஏன் சருமத்தில் கரும்புள்ளி ஏற்படுகிறது? என்பது குறித்து நாம் அறிந்துக்கொள்வோம்.
கரும்புள்ளி ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள் : மெலனின் என்பது ஒரு இயற்கையான நிறிமியாகும். இது சருமத்திற்கு நிறத்திற்கு நிறத்தை அளிக்கிறது. ஒரு சில காரணங்களால் மெலனின் அதிகளவு உற்பத்தி செய்ய வேண்டிய செல்கள் சேதமடையும் போது, அவை அதிக மெலனின் உற்பத்தி செய்யத் தொடங்குவதால் கருந்திட்டுகள் ஏற்படுகிறது.
அதிக நேரம் சூரிய ஒளியில் இருக்கும் போதும் கரும்புள்ளிகள் ஏற்படுகிறது. இதோடு சில நேரங்களில் ஒரு ஹார்மோன் மாற்றமும் இத்தகைய கரும்புள்ளி பிரச்சனைகள் ஏற்படுவதைத் தூண்டுகிறது. தோல் நிறமாற்றத்தின் சிறிய திட்டுகளின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. மேலும் சில மருந்துகளின் பக்க விளைவுகளாலும் கரும்புள்ளிகள் சருமத்தில் ஏற்படுகிறது. இதோடு சில சமயங்களில் சில தோல் பராமரிப்புப் பொருள்கள் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இதன் விளைவாக கருமையான திட்டுகள் ஏற்படுகிறது.
சிலிக்கான் பயன்படுத்துதல் : முகப்பருக்கள் என்பது சரிசெய்யக்கூடிய சரும பிரச்சனைகளில் ஒன்று. ஆனால் ஆரம்பத்திலேயே முகத்தில் பருக்களைக் கவனிக்கவேண்டும். இல்லாவிடில் கருந்திட்டுகள் ஏற்படும். எனவே பருக்கள் முகத்தில் தோன்றினாலே காயங்களைக் குணப்படுத்தும் சிலிக்கான் ஜெல்லைப் பயன்படுத்தலாம். இது முகத்தில் உள்ள வடுக்களை மென்மையாக்க உதவுகிறது. இருந்தப்போதும் குறைவான அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.