இன்றைய பெண்களிடம் ஒப்பனை அதாவது மேக் அப் செய்துக்கொள்ளும் பழக்கம் என்பது அதிகமாகிவிட்டது. திருவிழாக்கள், திருமணம் போன்ற வீட்டு விசேசங்கள், ஷாப்பிங் செல்வது என அனைத்து இடங்களிலும் சிறந்த தோற்றத்தைப் பெற வேண்டும் என்பதற்காக அதிகளவில் பவுண்டேஷனைத் தான் பயன்படுத்துகின்றனர். பல வகையான சரும பவுண்டேஷன் உள்ள நிலையில் தவறான பயன்படுத்திவிட்டீர்கள் என்றால், பல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். இதோ என்னென்ன பவுண்டேஷன்கள் சந்தையில் விற்பனையாகிறது? யாரெல்லாம் பயன்படுத்த முடியும்? என்பது குறித்து இங்கே நாமும் அறிந்துக் கொள்வோம்.
கிரீம் பவுண்டேஷன் : எண்ணெய் பிசுபிசுப்பு, வறண்ட சருமம் போன்ற அனைத்து சருமத்தினரும் கிரீம் வடிவிலான பவுண்டேஷன்களைப் பயன்படுத்தலாம். இந்த க்ரீம் பவுண்டேஷனை ஸ்பாஞ்ச் உதவியுடன் முகத்தில் கலப்பதன் மூலம் உங்கள் மேக்கப் நீண்ட நேரத்திற்கு பிரஷ்ஷாக உள்ளது. மேலும் திரவ பவுண்டேஷனை விட கொஞ்சம் கெட்டியானது மற்றும் அடர்த்தியாக இருப்பதால் முகத்தை காலையிலிருந்து மாலை வரை பொலிவுடன் இருக்க உதவுகிறது. நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் ஸ்டிக் பவுண்டேஷன் அல்லது பிரெஸ்ட் பான் வடிவில் தேர்வு செய்துக் கொள்ளுங்கள்.
திரவ பவுண்டேஷன் (liquid foundation) : இன்றைக்கு மக்கள் பலர் பரவலாகப் பயன்படுத்தக்கூடிய பவுண்டேஷன் தான் திரவ பவுண்டேஷன். இதில் பல பிரிவுகள் உள்ளது. ப்ரெட்னஸ் மற்றும் இயற்கையான சருமத் தோற்றத்தைப் பெறுவதற்கு இது மிகுந்த உதவியாக உள்ளது. சருமத்தை ஈரப்பதமாக வைத்திருப்பதோடு, சீக்கிரம் உலர்ந்து விடாமல் காக்கிறது. அனைத்துத் தோல் நிறங்களுக்கும் இந்த திரவ பவுண்டேஷனைப் பயன்படுத்தலாம்.
ஜெல் அடிப்படையிலான பவுண்டேஷன் : பெண்கள் பயன்படுத்தக்கூடிய ஜெல் அடிப்படையிலான பவுண்டேஷன், தோல் நிறமி, கறைகள் மற்றும் சுருக்கங்கள் மற்றும் கோடுகளை மறைக்கிறது. குறிப்பாக உங்களது மேக்கப்பை சீக்கிரம் முடிப்பதற்கு மற்றும் வெளிப்படையான சரும தோற்றத்தைப் பயன்படுத்த ஜெல் அடிப்படையிலான பவுண்டேஷனைப் பயன்படுத்துவது உங்களுக்கு நல்ல ரிசஸ்ட் கொடுக்கும்.
மியூஸ் (Mousse) பவுண்டேஷன் : உங்களது முகத்திற்கு முழுமையான பளபளப்பு கிடைக்க வேண்டும் என்றால் Mousse பவுண்டேஷன் மிகவும் சிறந்தது. டியூப் அல்லது பாட்டிலில் உள்ள Mousse பவுண்டேஷன் மிகவும் லேசானது. கடற்பாசி அல்லது காட்டனைப் பயன்படுத்தி முகத்தில் அப்ளே செய்யலாம்.Mousse அடித்தளம் முகத்திற்கு ஒரு முழுமையான பூச்சு வழங்குகிறது. ஒரு குழாய் அல்லது பாட்டில் உள்ள Mousse அடித்தளம் மிகவும் இலகுவானது. அதே நேரத்தில், நீங்கள் ஒரு பருத்தி பந்து அல்லது ஒரு கடற்பாசி மூலம் உங்கள் முகத்தில் தடவலாம். இருப்பினும், மியூஸ் பவுண்டேஷனைப் பயன்படுத்திய பிறகு முகத்தில் கிரீம் பயன்படுத்த மறந்து விடாதீர்கள்.இதுப்போன்று உங்களது சருமத்திற்கு எது தேவை அல்லது எது உகந்தது? என்பதை முழுமையான அறிந்துக் கொண்டு பயன்படுத்த ஆரம்பியுங்கள்.