முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » முகப்பருக்களை நீக்க கூடிய ’குளோரோபில் வாட்டர்’ பற்றி தெரியுமா..?

முகப்பருக்களை நீக்க கூடிய ’குளோரோபில் வாட்டர்’ பற்றி தெரியுமா..?

வீடியோ ஒன்றில், இளம் பெண் ஒருவர் ஒரு வாரத்திற்கு ஒவ்வொரு நாளும் சில துளி குளோரோபிலை தனது தண்ணீரில் போடுகிறார். அதை குடித்து வந்த பிறகு அவரது முகம் மிகவும் பொலிவாக மாறியுள்ளதை காண முடிகிறது.

 • 18

  முகப்பருக்களை நீக்க கூடிய ’குளோரோபில் வாட்டர்’ பற்றி தெரியுமா..?

  தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற எல்லோரும் பல விதமான வழிமுறைகளை பின்பற்றி வருவோம். ஆனால், அவற்றில் மிக சில மட்டுமே சரியான தீர்வை தரும். நமது தோல் பராமரிப்பிற்காக மிகவும் விலை மதிப்புள்ள பொருட்களை கூட வாங்கி முயற்சி செய்வோம். ஆனால் நாங்கள் பயன்படுத்தும் அனைத்து தயாரிப்புகளும் நமது சருமத்திற்கு சரியானவையா என்பதை யோசித்து பார்த்து கொள்ள வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 28

  முகப்பருக்களை நீக்க கூடிய ’குளோரோபில் வாட்டர்’ பற்றி தெரியுமா..?

  சருமப் பரிமாரிப்பிற்காக அவ்வப்போது சில பிரபலமான வழிகளை வல்லுநர்கள் கூறுவது வழக்கம். அந்த வகையில், பல டிக்-டாக்கர்களின் கூற்றுப்படி, குளோரோபில் வாட்டர் குடிப்பதன் மூலம் சருமத்தை மேம்படுத்த முடியும் என்று கூறியுள்ளனர். இந்த செய்முறை மூலம், பருக்கள் மற்றும் வடுக்களை மறையச் செய்து பொலிவான சருமத்தை பெற முடியுமாம்.

  MORE
  GALLERIES

 • 38

  முகப்பருக்களை நீக்க கூடிய ’குளோரோபில் வாட்டர்’ பற்றி தெரியுமா..?

  கோடை காலம் நெருங்கி வருவதால், விடுமுறை நாட்களில், கடற்கரையில் நீங்கள் எங்கிருந்தாலும், சூரிய ஒளியில் நேரடியாக தோலைக் காட்டுவது எப்படி என்பதைக் குறிப்பிட்டு காட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகரித்து வருகின்றன. சமீபத்திய வீடியோக்களில் ஒன்று, குளோரோபில் தண்ணீரை குடிப்பது குறித்து வெளியாகி வைரலானது. டிக்-டாக்கில், #chlorophyllwater" என்ற ஹேஷ்டேக் ஏற்கனவே 255 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

  MORE
  GALLERIES

 • 48

  முகப்பருக்களை நீக்க கூடிய ’குளோரோபில் வாட்டர்’ பற்றி தெரியுமா..?

  இதுபோன்ற வீடியோக்களில், பல்வேறு பயனர்கள் இந்த குளோரோபில் தண்ணீரை ஒரு காக்டெய்ல் போல பருகுவதை நாம் காணலாம். இந்த டிப்ஸ் முதன்முதலில் 2021 ஆம் ஆண்டில் பிரபலப்படுத்தப்பட்டது. ஒரு அமெரிக்கப் பெண் தன்னை குளோரோபில் பெண்மணி (chlorophyllgirl) என்று அழைத்துக் கொண்டார். மேலும் அவர் அந்த கலவையை உட்கொண்டதால் முகப்பரு மறைந்துவிட்டது என்றும் அவரின் வீடியோவில் பதிவு செய்திருந்தார். இப்போது 20 மில்லியன் பார்வைகளைக் கொண்ட அவரது வீடியோ ஒன்றில், இளம் பெண் ஒருவர் ஒரு வாரத்திற்கு ஒவ்வொரு நாளும் சில துளி குளோரோபிலை தனது தண்ணீரில் போடுகிறார். அதை குடித்து வந்த பிறகு அவரது முகம் மிகவும் பொலிவாக மாறியுள்ளதை காண முடிகிறது.

  MORE
  GALLERIES

 • 58

  முகப்பருக்களை நீக்க கூடிய ’குளோரோபில் வாட்டர்’ பற்றி தெரியுமா..?

  குளோரோபில் என்றால் என்ன? குளோரோபில் என்பது ஸ்பைருலினா அல்லது காய்கறிகள் போன்ற பாசிகளில் பொதுவாகக் காணப்படும் ஒரு பிரகாசமான பச்சை மூலக்கூறு ஆகும். ஒளிச்சேர்க்கையின் செயல்பாட்டில் ஒரு மைய உறுப்பு, குளோரோபில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் தண்ணீரை தாவரத்திற்கான ஊட்டச்சத்துக்களாக மாற்றுவதற்கு ஒளியை ஆற்றலாக உறிஞ்ச முடியும். டிக்-டாக்கர்களால் உட்கொள்ளப்படும் குளோரோபிலின் என்பது நீரில் கரையக்கூடிய வடிவமாகும். நிபுணர்களின் கூற்றுப்படி, இது தூள் அல்லது மாத்திரையை விட திரவ வடிவில் உடலால் நன்றாக உறிஞ்சப்படுகிறது என்று கருதப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 68

  முகப்பருக்களை நீக்க கூடிய ’குளோரோபில் வாட்டர்’ பற்றி தெரியுமா..?

  இது உடல் வீக்கத்தைக் குறைப்பதாகவும், செரிமானத்தை மேம்படுத்துவதாகவும், ஆரோக்கியமான சருமத்தை உறுதி செய்வதாகவும், ஆற்றலை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆன்லைனிலும், இயற்கை உணவுக் கடைகளிலும் இந்த குளோரோபில் கிடைக்கும். இதை ஒவ்வொரு நாளும் சுமார் 10 சொட்டுகளை தண்ணீரில் கலந்து குடிக்கும்படி பரிந்துரைக்கின்றனர். பற்களில் கறை படியும் அபாயத்தைத் தவிர்க்க ஃபில்டர் மூலம் கலவையை குடிக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 78

  முகப்பருக்களை நீக்க கூடிய ’குளோரோபில் வாட்டர்’ பற்றி தெரியுமா..?

  குளோரோபிலினில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகள் உள்ளது என்று ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இது தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளால் நமது செல்களுக்கு ஏற்படும் பல்வேறு வகையான சேதங்களுக்கு எதிராக போராட உதவுகிறது. இருப்பினும், டிக்-டாக்கில் உள்ள பல வீடியோக்கள் நாம் நம்புவதற்கு மாறாக, முகப்பருவை உண்மையில் மறையச் செய்யும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை!

  MORE
  GALLERIES

 • 88

  முகப்பருக்களை நீக்க கூடிய ’குளோரோபில் வாட்டர்’ பற்றி தெரியுமா..?

  டிக்-டாக்கர் auntieamandalee_ இன் வீடியோவின் கமண்ட் பிரிவில் இந்த குளோரோபில் வாட்டர் பற்றி தங்களது சந்தேகங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES