மேக்கப் இருந்தாலும் , இல்லையென்றாலும் கொஞ்சம் ஐலைனர் போட்டுக் கொண்டால் முகத்தின் அழகு கூடும், கண்கள் பளிச்சென்று தெரியும். கண்களின் அழகை மேம்படுத்தா ஐலைனர் மட்டும் கூட போதும். மெலிதான ஐலைனர் கோட்டிங் முதல், கண்களை கவர்ச்சியாக மாற்றும் விங்டு ஐலைனர் வரை, பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையான கண்கள் மேக்கப்பிற்கும் ஒவ்வொரு வகையான ப்ரைஸ் தேவை. இது ஐலைனருக்கும் பொருந்தும். ஐலைனரை நீங்கள் விரும்பும் வகையில் போட்டுக்கொள்ளஅதற்கு பொருத்தமான ஐலைனர் பிரஷ் தேவை. எந்த வகையான ஐலைனர் பிரஷ் பயன்படுத்தினால், எப்படி விதவிதமான ஐலைனர் போட்டுக்கொள்ள முடியும் என்று பார்க்கலாம்.
ஃபைன் லைனர் பிரஷ் : இது மிகவும் மெல்லிய ஐலைனர் பிரஷ் ஆகும். மெல்லியதாக, நேர்த்தியாக ஐலைனர் போட்டுக்கொள்ள, இந்த பிரஷ் உதவும். மேலும், ஒரு முறை ஐலைனர் வரைந்த பின்பு, அதன் மேல் கோட்டிங் செய்ய, இந்த ஃபைன் லைனரை பயன்படுத்தலாம். உங்களுக்கு திக்காக ஐலைனர் போட்டுக்கொள்ள வேண்டும் ஆனால், இந்த பிரஷ்ஷைப் பயன்படுத்தி இரண்டு மூன்று லேயர்கள் ஐலைனர் போட்டுக்கொள்ளலாம்.
டோம் வடிவத்தில் இருக்கு தட்டையான பிரஷ் : C வட்டமாக இருப்பதால், ஐலைனரை எடுத்து கண்களில் அப்ளை செய்ய பொருத்தமாக இருக்கும். இந்த வடிவ பிரஷ்ஷைப் பயன்படுத்தி நீங்கள் ஐலைனரை அடர்த்தியாக, திக்காக ஒரே ஸ்ட்ரோக்கில் வரைந்து கொள்ளலாம். விங்டு லைனர், அல்லது கண்களின் வெளிப்புறத்தில் அடர்த்தியாக வரைவது ஆகியவற்றுக்கு இது பொருத்தமாக இருக்கும்.
முனையில் வளைந்திருக்கும் ஐலைனர் பிரஷ் : மிகவும் மெல்லிதாக இருக்கும் இந்த பிரஷ் ஒரு பக்கமாக முனையில் வளைந்திருக்கும். ஐலைனர் போட்டுக்கொண்டிருப்பது தெரியக் கூடாது என்று விரும்புபவர்கள் இதைப் பயன்படுத்தலாம். அது மட்டுமல்லாமல், இதில் வளைவான லைன், விங்க்டு லைனர் ஆகியவற்றை அடர்த்தியாக்கவும் பயன்படுத்தலாம்.
வளைந்திருக்கும் முனை கொண்ட தட்டையான பிரஷ் : நேராக ஒரே கோடாக வரையாமல், ஒரு குறிப்பிட்ட வடிவில் அல்லது சாய்வாக ஐலைனர் வேண்டுமென்றால், இந்த தட்டையான ஆனால் ஷார்ப்பான முனை கொண்ட பிரஷ்ஷை பயன்படுத்தலாம். இது சிறியது, நடுத்தரம் மற்றும் பெரியது என்று மூன்று அளவுகளில் வருகிறது. ஐலைனரை பட்டையாக போட்டுக்கொள்ள, திக்கான லைன்கள் வரைய இது உதவும்.