இன்றைய இளைஞர்கள் அனைவரும் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகளில் ஒன்று பொடுகு. பொடுகை ஒழிக்க நாம் முயற்சி செய்யாத மருந்தே இருக்காது. ஆனால், தீர்வு மட்டும் நமக்கு கிடைத்திருக்காது. பொடுகுக்கு தீர்வு காண விரும்பினால், ஊட்டச்சத்து நிறைந்த வெங்காயச் சாற்றினை கூந்தலுக்கு எப்படி முறையாக பயன்படுத்துவது? என பார்க்கலாம்.
10 சின்னவெங்காயத்தை தோலுரித்து எடுத்துக்கொள்ளவும். அதை மிக்சி ஜாரில் போட்டு, 5 ஸ்பூன் அரிசி கழுவிய தண்ணீரை சேர்த்து மைபோல அரைக்கவும். இப்போது, ஒரு வெள்ளை துணி அல்லது ஜல்லடையை எடுக்கவும். அதில் அரைத்த வெங்காயத்தை சேர்த்து வடிகட்டவும். கடிகட்டிய தண்ணீரை, குளிப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன் தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.