ரிலாக்ஸ் ஆன ஹேப்பி ஆன ஒரு ஆடையை தேர்வு செய்ய வேண்டும் என்றால், குறிப்பாக வெயில் காலத்தில், நம்மை அறியாமலேயே நாம் ஸ்லீவ்லெஸ் ஆடைகளின் பக்கமே செல்வோம். இந்த இடத்தில், நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை விட நீங்கள் உங்கள் அக்குள்களை அனைவருக்கும் காட்ட தயாரா?" என்கிற கேள்வியே முக்கியம். ஏனெனில் நம்மில் பலரும் பெரிய அளவிலான அக்கறை கொள்ளாத ஒரு உடல் பகுதி உள்ளதென்றால், அது அக்குள் பகுதிகள் தான். சிலர் அக்குள்களை பராமரிக்கிறோம் என்கிற பெயரில் சில தவறுகளையும் செய்து வருகிறார்கள். அதென்ன தவறுகள்? அதை திருத்திக் கொள்வது எப்படி? போன்ற விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்...
எக்ஸ்ஃபோலியேஷன் ஸ்கிப்பிங் (Skipping Exfoliation) : அக்குள்களுக்கு தினமும் குளிக்கும்போது லேசாக சோப்பு போட்டால் மட்டும் போதாது. நமது உடலில் அதிக வியர்வை சுரக்கும் பகுதி நம் அக்குள்கள் தான். எனவே உங்கள் அக்குள்களை துடைப்பது இன்றியமையாதது ஆகும். லேசான பாடி ஸ்க்ரப் மூலம் உங்கள் அக்குள்களை வாரத்திற்கு இரண்டு முறை எக்ஸ்ஃபோலியேட் செய்வது நல்லது.
மாய்ஸ்சரைசேஷன் மீது ஸ்கிம்பிங் (Skimping On Moisturisation) : வேக்ஸிங், ஷேவிங் மற்றும் எக்ஸ்ஃபோலியேட் அக்குள்களை வறட்சி ஆக்கும், மந்தம் ஆக்கும். உங்கள் அக்குள்களை ஆரோக்கியமாகவும் கவர்ச்சியாகவும் வைத்திருக்க அவற்றை ஈரப்பதமாக்குவது அவசியம். ஆனால் வியர்வை ஈரப்பதம் ஆகாது. எனவே தினமும் குளித்த பிறகு, மாய்ஸ்சரைசராக உங்கள் அக்குள்களில் பாடி லோஷனைப் பயன்படுத்துங்கள்.
ஷேவிங் (Shaving) : அக்குள்களில் ஒரு கொத்து முடி இருப்பதை யாருமே விரும்ப மாட்டார்கள். மேலும் முடி இல்லாத அக்குள்களை பெற நாம் கையில் எடுக்கும் ஒரு ஆயுதம் தான் - ஷேவிங். இது எவ்வளவுக்கு எவவ்ளவு எளிதோ, அவ்வளவுக்கு அவவ்ளவு தீங்கும் கூட. அக்குள்களின் உணர்திறன் வாய்ந்த சருமத்தில் ஷேவிங் கடினமான ஒரு செயலாகும். இது வறட்சி, எரிச்சல், எதிர்வினை போன்ற சிக்கல்களில் வந்து நிற்கும். எனவே, உங்கள் அக்குள்களை ஷேவிங் செய்வதற்குப் பதிலாக, அவற்றை வேக்ஸி ங் செய்து பாருங்கள்.
பராமரிப்பு வழக்கமின்மை : அழகான அக்குள்களை ஒரே இரவில் அடைய முடியாது. அதற்காக நீங்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும். அதாவது ஊட்டமளிக்கும் அக்குள் பராமரிப்பு வழக்கத்தை நீங்கள் பின்பற்ற வேண்டும். இந்த இடத்தில் மிகவும் எளிமையான சிடிஎம் ரௌட்டீன் உங்களுக்கு கைகொடுக்கலாம். கூடுதல் புத்துணர்ச்சிக்கு வாரத்திற்கு இரண்டு முறை எக்ஸ்ஃபோலியேட் செய்யவும்.
டியோடரண்டுகளைப் பயன்படுத்துதல் : அக்குள் பிரச்சனைகள் கவனக்குறைவான தயாரிப்புகளை பயன்படுத்துவதிலும் ஏற்படலாம். குறிப்பாக அதிக ஆல்கஹால் அளவைக் கொண்ட டியோடரண்டுகள். ஆல்கஹால் கைகளின் கீழ் உள்ள தோலை கருமையாக்குகிறது, அதை அதிகமாக உலர வைக்கிறது மற்றும் எரிச்சலூட்டுகிறது. எனவே அதிக ஆல்கஹாலை கொண்ட டியோடரண்டுகளைத் தவிர்த்து, ஆல்கஹால் இல்லாத மாற்றுகளை தேர்வு செய்வது நல்லது. மேலும், டியோடரண்டை எப்போதும் அக்குள்களில் இருந்து தூரமாக வைத்து தெளிக்கவும்.