ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி கண்களுக்கு கீழே கருவளையங்கள் ஏற்படுகிறது. அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இரத்த நாளங்கள் உடைந்து தோலின் மேல் இரண்டு அடுக்குகளில் நிறமாற்றத்தை ஏற்படுத்தினால், அது கண்களுக்குக் கீழே கருமையான வட்டங்களை உருவாக்கும்.
சரியான தூக்கம் : கருவளையங்களை போக்க முக்கியமானது ‘சரியான தூக்கம்’ ஆகும். அதிக நேரம் மொபைல் பயன்படுத்தாமல் தூங்கினால் கருவளையம் மெல்ல மெல்ல குறைந்துவிடும். மேலும் சரியான நேரத்தில் ஃபேஷியல், மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்தி கரு வளையத்தினை போக்கலாம். ஃபேஷியல் செய்வதனால் தோலானது இளமையாக இருப்பதோடு, புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.
வீட்டிலேயே சரி செய்யலாம் : குளிர்ந்த கிரீன் டீ கண்களில் கருவளையத்தில் தடவுவது அல்லது வெள்ளரி சாறு மற்றும் உருளைக்கிழங்கு சாறு தடவுவது போன்ற வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களை வைத்து கருவளையத்தை சரி செய்து கொள்ள முடியும். வெள்ளரிக்காயில் உள்ள அஸ்கார்பிக் அமிலம், காஃபிக் அமிலம் மற்றும் சிலிக்கா போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கருமையை குறைக்கின்றது. மேலும் கன்சீலர் மற்றும் மாய்ஸ்சரைசர்களை சரியாக பயன்படுத்துவதன் மூலம் கருமையை குறைக்க முடியும்.
பாதாம் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ : வைட்டமின் ஈ உடன் பாதாம் எண்ணெயைப் பயன்படுத்தி வந்தால் கருவளையங்கள் குறையும். இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு, பாதாம் மற்றும் வைட்டமின் ஈ கலந்த கலவையை எடுத்து கண்களுக்குக் கீழே மசாஜ் செய்யலாம். இதன் மூலம் கண்களின் கீழே காணப்படும் கருவளையங்களை எளிதில் போக்க முடியும்.