முக அழகை பாதுகாக்க பல்வேறு வழிகளை நாம் பின்பற்றி வருகிறோம். பலர் நமக்கு எண்ணற்ற டிப்ஸ் தருவார்கள். இப்படி செய்தால் முகம் அழகாகும், இந்த க்ரீமைகளை பயன்படுத்தினால் பருக்கள் மறைந்து போகும், வெண்மையாகும் என சொல்வார்கள். இதுபோன்ற பலவித வழிகளை ட்ரை செய்து சோர்வாக உள்ளீர்களா? இனி இந்த கவலை வேண்டாம்! உங்கள் முக அழகை பாதுகாக்க நிபுணர்கள் கூறும் இந்த 6 வழிகளை பின்பற்றினாலே போதும். தன்னம்பிக்கை கொண்ட அழகை நிச்சயம் பெறுவீர்கள். இந்த எளிமையான 6 ஃபேஸ் பேக்ஸ் பற்றி இனி அறிந்து கொள்ளலாம்.
பாதாம் பேக் :முதல் நாள் இரவே 4-5 பாதாமை பாலில் ஊற வைக்கவும். பிறகு மறுநாள் காலை, இதன் தோலை உரித்து அதே பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இந்த மென்மையான பேக்கை இரவில் முகத்தில் தடவுங்கள். மறுநாள் காலையில் முகத்தை கழுவுங்கள். இப்படி செய்து வந்தால் உங்கள் முகம் பளபளப்பாக மின்னும். பாதாமில் உள்ள ஆன்ட்டி-ஆக்சிடென்ட்ஸ் முகத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, உங்களுக்கு ஏற்ற பொலிவான தோற்றத்தை உண்டாக்கும்.
தக்காளி-எலுமிச்சை மாஸ்க் :ஒரு தக்காளியை எடுத்து கைகளால் பிசைந்து கொள்ளவும், பிறகு அதில் 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்றாக கலக்குங்கள். இதை முகத்தில் ஃபேஸ் மாஸ்க் போன்று அப்ளை செய்யவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்போது உங்கள் முகம் பொலிவாகவும், அழகாகவும் தோன்றும். இந்த பேக்கில் கலந்துள்ள எலுமிச்சையில், முகத்தை பளபளப்பாக்கும் தன்மை உள்ளது. எனவே சிறந்த பலனிற்கு வாரம் 3 முறை இந்த ஃபேஸ் மாஸ்க் ட்ரை செய்யுங்கள்.
ஓட்ஸ் மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க் :சிறிதளவு ஓட்ஸை தேனுடன் கலந்து வைக்கவும். ஓட்ஸ் மென்மையாகும் வரை காத்திருக்கவும். பிறகு இவற்றை நன்றாக அரைத்து முகத்தில் தடவி ஒருநாள் இரவு முழுக்க அப்படியே விடுங்கள். மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். இந்த ஃபேஸ் மாஸ்க் உங்கள் முகத்திற்கு ஈரப்பதமளிக்கும் மற்றும் முகத்தில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களை அகற்ற உதவும்.
கற்றாழை மற்றும் கிளிசரின் மாஸ்க் :கற்றாழையின் ஜெல்லை தனியாக எடுத்து சிறிது கிளிசரினுடன் சேர்த்து பேஸ்ட் போன்று கலக்கவும். பிறகு இதை முகத்தில் லேசாக தடவி விடுங்கள். 20 நிமிடம் கழித்து இந்த ஃபேஸ் மாஸ்க்கை கழுவுங்கள். கற்றாழையில் உள்ள அலோயின் என்கிற மூலப்பொருள் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி முகம் பளபளப்பாகுவதை உறுதிப்படுத்தும்.
எலுமிச்சை மற்றும் மில்க் கிரீம் மாஸ்க் : ஒரு டேபிள் ஸ்பூன் மில்க் கிரீம் எடுத்துக்கொண்டு அதில் 4 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலக்கவும். இதை முகத்தில் தடவி இரவு முழுக்க அப்படியே விட்டு, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இந்த கிரீமில் உள்ள இயற்கையான கொழுப்பு அமிலங்கள் உங்கள் முகத்தை ஈரப்பதமாக வைக்கும். மேலும் இதிலுள்ள எலுமிச்சை, முகம் பொலிவடைய உதவும்.
வாழைப்பழம் - யோகர்ட் மாஸ்க் : 2 டேபிள்ஸ்பூன் யோகர்ட்டில் சிறிது மசித்த வாழைப்பழம், 1 டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவை மென்மையாக இருக்க வேண்டும். அப்போது தான் முகத்தில் இதை தடவும்போது நல்ல பலனை தரும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, இது முழுவதுமாக உலர்ந்த பின் 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள். இந்த ஃபேஸ் மாஸ்க் முகத்தை மென்மையாக வைக்கும் மற்றும் அழகிய தோற்றத்தை தரும். மேற்சொன்ன 6 வகையான ஃபேஸ் மாஸ்க்கை ட்ரை செய்து, உறுதியான அழகை பெறுங்கள்!.