உடற்பயிற்சி: உடற்பயிற்சிகள் செய்வது சரும ஆரோக்கியத்திற்கு சிறந்த பலனை தருகிறது. ஏனெனில் இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கலவையை வெளியிடுகிறது. சரியான உடற்பயிற்சிகள் ஒரு நபரை நீண்ட காலம் இளமையாக வைத்திருக்கும் என்பதற்கு பல அறிவியல் சான்றுகள் உள்ளன. நீங்கள் வீட்டிற்கு வெளியில் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால், உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
மசாஜ்: மசாஜ் சருமத்தில் இருக்கும் டென்ஷனை ரிலீஸ் செய்து தசைகளை ரிலாக்ஸ் செய்கிறது. இதன் மூலம் சுருக்கங்கள் ஏற்படுவது குறையும். மாசாஜ் மூலம் சருமத்திற்கு கிடைக்கும் அதிகரித்த ரத்த ஓட்டம் செல் மீளுருவாக்கம் செய்ய உதவுகிறது. அடிக்கடி ஃபேஸ் மசாஜ் செய்வது சருமத்தை மென்மையாக மற்றும் இளமையாக வைக்கிறது.
ஜூஸ்: வெள்ளரி மற்றும் கீரை ஜூஸ், கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ், தக்காளி மற்றும் கேரட் ஜூஸ், பப்பாளி ஜூஸ், புதினா மற்றும் வெள்ளரி ஜூஸ், ப்ரோக்கோலி ஜூஸ், எலுமிச்சை மற்றும் இஞ்சி ஜூஸ் உள்ளிட்ட பல ஜூஸ்கள் சரும ஆரோக்கியத்திற்கு எடுத்து கொள்ளலாம். எனினும் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும் இது போன்ற கிரீன் ஜூஸ்களுக்கு சர்க்கரை சேர்க்காமல் தவிர்ப்பது நல்லது.