ஆயிலி ஸ்கின் (எண்ணெய் வடியும் சருமம்) : உங்கள் சருமம் எண்ணெய்ப் பசை மிகுந்ததாக இருந்தால், நீங்கள் அதிக எடை இல்லாத, எண்ணெய் பிசுக்கற்ற, சருமத்தின் துளைகளை அடைக்காமல் பாதுக்காக்க வல்ல காமெடோஜெனிக் அல்லாத பொருட்கள் அல்லது நீர் சார்ந்த தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும். அதே சமயம், அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் உங்கள் முகத்தை ஒருமுறைக்கு இருமுறை கழுவ வேண்டும்.
அதோடு, மேட் ஃபினிஷ் (matte finish) ஃபவுண்டேஷன் அல்லது மேட்டிஃபையிங் எஃபெக்ட் (mattyfying effect) உடனான டின்டட் (tinted) மாய்ஸ்சரைசரை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் மேக்கப் நீங்கள் போட்டவாறு அப்படியே கச்சிதமாக பொருந்தி இருக்க வேண்டும் என்றால், லூஸ் (loose) ஆன அல்லது காம்பேக்ட் (compact) பவுடர் கொண்டு ஃபவுண்டேஷனை செட் செய்யவும். இது உங்கள் முகத்தில் வடியக் கூடிய அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்தி நாள் முழுவதும் அழகாக தோற்றமளிக்க உதவியாக இருக்கும்.
டிரை ஸ்கின் (வறண்ட சருமம்) : உங்களுக்கு வறண்ட சருமம் என்றால், நீங்கள் டூயி (dewy) அல்லது சாடின் (satin) ஃபினிஷ் ஃபவுண்டேஷன் அல்லது உங்கள் வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்கி தகுந்த ஊட்டமளிக்கக் கூடிய ஹைட்ரேட்டிங் டின்டேட் மாய்ஸ்சரைசரை தேர்வு செய்து பயன்படுத்தலாம். லேபிளில் மேட் அல்லது பவுடர் ஃபினிஷ் என்று இருந்தால் அந்த ஃபவுண்டேஷனைத் தவிர்த்து விடுங்கள். அதே போல், பவுடர் சார்ந்த தயாரிப்புகளையும் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், அவை ஏற்கனவே வறண்ட இருக்கும் உங்கள் சருமத்தின் வறட்சியை மேலும் அதிகரிக்கக் கூடும். தேவைப்பட்டால், மிகக் குறைந்த அளவில் மட்டுமே அவற்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். கடைசியாக டூயி ஃபினிஷ் (dewy finish) அல்லது ஹைட்ரேட்டிங் ஃபிக்சிங் ஸ்ப்ரே (hydrating fixing spray) பயன்படுத்துங்கள். அவ்வளவு தான், உங்களுக்கு வறண்ட சருமம் என்று நீங்கள் சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள்.
காம்பினேஷன் ஸ்கின் : உங்களுக்கு எண்ணெய் வடியும் T-ஸோன் மற்றும் வறண்டு போன கன்னங்கள் என இரண்டும் கலந்த சருமமாக இருந்தால், இவ்விரண்டிற்கும் ஏற்றவாறு நீங்கள் மேக்கப் போட வேண்டும். அதாவது, T-ஸோனுக்கு எண்ணெய் இல்லாத மற்றும் எடைக் குறைவான தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும். ஆனால், உங்கள் வறண்ட கன்னங்களுக்கு ஈரப்பதமூட்டும் தயாரிப்புகளை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். அது மட்டும் அல்ல, T-ஸோனுக்கு மேட் ஃபினிஷ் ஃபவுண்டேஷன் பொருத்தமாக இருக்கும். வறண்ட கன்னங்களுக்கு ஹைட்ரேட்டிங் ஃபவுண்டேஷன் சரியாக இருக்கும். இவ்வாறு சரியாக தேர்வு செய்து பயன்படுத்தினால், உங்கள் மேக்கப் பக்காவாக இருக்கும்.
மேக்கப் போடுவதற்கு முன் நீர் சார்ந்த மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். அதற்குப் பின், மேட்டிஃபையிங் ப்ரைமரைப் பயன்படுத்தினால் மேக்கப் எளிதில் களைந்து விடாமல் பாதுகாப்பாக இருக்கும். உங்கள் மேக்கப்பை டிரான்ஸ்லூசன்ட்டான (translucent) பவுடர் கொண்டு செட் செய்யவும். ஏனெனில், அது இலகுவாக இருப்பதோடு உங்கள் மேக்கப் கச்ச கச்ச என்று இல்லாமல் நேர்த்தியாக இருக்கும். நாளின் முடிவில் உங்கள் சருமம் எண்ணெய் பிசுக்குடன் பளபளப்பாக இருந்தால், ஹைலைட்டரை (highlighter) குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வறண்ட கன்னங்களுக்கு திரவ வடிவிலான ஹைலைட்டர் பொருத்தமாக இருக்கும். கடைசியாக மேட் செட்டிங் ஸ்ப்ரே பயன்படுத்தினால் போதும். அசத்தலாக தோற்றமளிப்பீர்கள்.
சென்சிட்டிவான சருமம் : உங்கள் சருமம் சென்சிட்டிவாக இருந்தால், நீங்கள் எந்த வித வாசனையும் இல்லாத, எரிச்சல் ஊட்டாத, அலர்ஜி ஏற்படுத்தாத, அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள தயாரிப்புகளைத் தேர்வு செய்து பயன்படுத்துங்கள். பொதுவாக, கடுமையான இரசாயனங்கள் அல்லது சாயங்கள் மற்றும் சேர்க்கைகள் போன்ற எந்த வித எரிச்சலூட்டும் பொருட்களும் இல்லாத கனிம அடிப்படையிலான மேக்கப் பொருட்கள் தான் இது போன்ற சருமத்திற்கு ஏற்றதாக இருக்கும்.
ஆக்டிவாக இல்லாத முகப்பருக்கள் இருக்கும் பகுதிகளில் பளபளப்பான சருமம் இருந்தால், ஒரு கிளன்சர் உடன் லேசான மற்றும் மென்மையான ஸ்க்ரப் அல்லது எக்ஸ்ஃபோலியேட்டரைப் பயன்படுத்த வேண்டும். சாலிசிலிக் அமிலம் அல்லது பென்சாயில் பெராக்சைடு போன்ற முகப்பருக்களை எதிர்த்துப் போராடும் தன்மை உடைய பொருட்கள் உடனான லைட் வெயிட்டான ஃபவுண்டேஷன் அல்லது டின்டட் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஹெவியான ஆயில் சார்ந்த தயாரிப்புகளைத் தவிர்த்து மினரல் அல்லது கனிம அடிப்படையிலான பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. அதோடு, பருக்கள் காரணமாக ஏற்பட்டு இருக்கும் தழும்புகள் அல்லது டார்க் ஸ்பாட்களை மறைக்க கரெட்கர் பயன்படுத்தலாம். இரவு உறங்க செல்வதற்கு முன் மேக்கப்பை அகற்றி விடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் உங்கள் மேக்கப் பிரஷை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள தவறாதீர்கள்.