ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » மாஸ்க் அணிவதால் மேக்அப் அப்ளை செய்தாலும் தெரியவில்லையா..? இதோ இருக்கு சூப்பர் டிப்ஸ்...

மாஸ்க் அணிவதால் மேக்அப் அப்ளை செய்தாலும் தெரியவில்லையா..? இதோ இருக்கு சூப்பர் டிப்ஸ்...

முகக்கவசம் அணிந்திருந்தாலும் நீர்ப்புகாத மற்றும் ஸ்மட்ஜ்-ப்ரூஃப் மேக்அப் தயாரிப்புகள் பல உள்ளன. இது முகக்கவசத்தோடு மிகவும் பொருத்தமான ஒன்றாக இருக்கும். மற்றொரு முக்கியமான மாற்றம் என்னவென்றால், இப்போது பெண்கள் உதட்டுச்சாயத்திற்கு குறைவான முக்கியத்துவத்தையும், கண் ஒப்பனைக்கு அதிக முக்கியத்துவத்தையும் கொடுத்து வருகின்றனர்.

 • 17

  மாஸ்க் அணிவதால் மேக்அப் அப்ளை செய்தாலும் தெரியவில்லையா..? இதோ இருக்கு சூப்பர் டிப்ஸ்...

  பல பெண்களுக்கு முகத்தில் மேக்அப் போட்டுக்கொள்வது என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் திருமணம் போன்ற விழாக்களில் கலந்துகொள்ளும் போது தங்களை அழகாக மெருகேற்றிக்கொள்ள நல்ல மேக்அப் தயாரிப்புகளை போட்டுக்கொள்வர். ஆனால் தற்போது முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அவை நம் உயிர்காக்கும் கவசம் என்பதால் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகவே மாறிவிட்டது. இந்த சூழ்நிலையில் பெரும்பாலான பெண்கள் முகக்கவசம் அணிந்திருப்பதால் அதிகபடியான மேக்அப் போட்டுக்கொள்ள தயங்குகிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 27

  மாஸ்க் அணிவதால் மேக்அப் அப்ளை செய்தாலும் தெரியவில்லையா..? இதோ இருக்கு சூப்பர் டிப்ஸ்...

  கொரோனா தொற்று காரணமாக ஒப்பனைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அவை ஒப்பனை பொருட்களின் விநியோகச் சங்கிலியில் பிரதிபலித்து வருகின்றன. உதாரணத்திற்கு, உதட்டுச்சாய விற்பனை தற்போது வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஏனெனில் முகத்தின் பாதி பகுதி முகக்கவசத்தால் மறைக்கப்படுவதால் உதட்டுச்சாயம் மற்றும் பௌண்டேஷன் பயன்பாடு குறைந்துவிட்டது. இதனால் பலர் பௌண்டேஷன் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, காம்பாக்ட் பவுடரை பயன்படுத்தி வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 37

  மாஸ்க் அணிவதால் மேக்அப் அப்ளை செய்தாலும் தெரியவில்லையா..? இதோ இருக்கு சூப்பர் டிப்ஸ்...

  ஆனால், முகக்கவசம் அணிந்திருந்தாலும் நீர்ப்புகாத மற்றும் ஸ்மட்ஜ்-ப்ரூஃப் மேக்அப் தயாரிப்புகள் பல உள்ளன. இது முகக்கவசத்தோடு மிகவும் பொருத்தமான ஒன்றாக இருக்கும். மற்றொரு முக்கியமான மாற்றம் என்னவென்றால், இப்போது பெண்கள் உதட்டுச்சாயத்திற்கு குறைவான முக்கியத்துவத்தையும், கண் ஒப்பனைக்கு அதிக முக்கியத்துவத்தையும் கொடுத்து வருகின்றனர். கண் ஒப்பனைக்கு முக்கியத்துவம் கொடுப்பது இப்போது ஒரு ட்ரெண்டாகவே மாறியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 47

  மாஸ்க் அணிவதால் மேக்அப் அப்ளை செய்தாலும் தெரியவில்லையா..? இதோ இருக்கு சூப்பர் டிப்ஸ்...

  இதனால் காஜல், ஐபென்சில்கள், ஐலைனர் மற்றும் ஐ ஷாடோ மிகவும் பிரபலமாகி விட்டது. உண்மையில், ஐ ஷாடோவின் பல்வேறு ஷாடோக்கள் நவநாகரீகமாக இருக்கும் என்பது தற்போதைய ஒப்பனையாளர்களின் கணிப்பு ஆகும். கண் ஒப்பனைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், தங்கள் புருவங்களைப் ப்ளக் செய்வதன் மூலமும் ஷேப் செய்வதன் மூலமும் புருவங்களை அழகாக வளர்த்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 57

  மாஸ்க் அணிவதால் மேக்அப் அப்ளை செய்தாலும் தெரியவில்லையா..? இதோ இருக்கு சூப்பர் டிப்ஸ்...

  ஒரு நிபுணரின் கூற்றுப்படி, தற்போது ஸ்மோக்கி ஐ, க்ளிட்டர் மற்றும் பாஸ்டல் ஹுயுஸ் ஆகியவை ஐஷாடோகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இதனால் வண்ண மஸ்காராக்கள் மற்றும் ஐலைனர்கள் மீண்டும் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விரைவில் ட்ரான்ஸ்பரென்ட் முகக்கவசங்களின் ட்ரெண்ட் அதிகரிக்கும் என்று பலர் கணித்துள்ளனர். இதனால் பெண்கள் பிரகாசமான உதட்டுச்சாயம் அணியலாம். இது முகக்கவசம் அணிந்திருந்தாலும் வெளியில் தெரியும் என்று தெரிவித்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 67

  மாஸ்க் அணிவதால் மேக்அப் அப்ளை செய்தாலும் தெரியவில்லையா..? இதோ இருக்கு சூப்பர் டிப்ஸ்...

  இதுபோன்ற சமயங்களில் நீங்கள் உதட்டுச்சாயம் அணியாமல் கூட இருக்கலாம். ஆனால் உதடுகளின் தோல் முகக்கவசத்தால் பாதிக்காதபடி தொடர்ந்து கவனித்துக் கொள்ள வேண்டும். தோலை பராமரிக்க லிப் பாம் தடவலாம், அல்லது, பாதாம் எண்ணெயை இரவில் உதடுகளில் தடவி அப்படியே விட்டுவிடலாம். முகக்கவசங்களை அணிந்து வெயிலில் நீண்ட நேரம் நிற்கும் போது உங்கள் முகத்தில் பகுதி அளவு சருமம் டான் ஆவதற்கு வழிவகுக்கும். இதனால் முகக்கவசம் மறைக்காத பகுதி பழுப்பு நிறமாக மாறும்.

  MORE
  GALLERIES

 • 77

  மாஸ்க் அணிவதால் மேக்அப் அப்ளை செய்தாலும் தெரியவில்லையா..? இதோ இருக்கு சூப்பர் டிப்ஸ்...

  எனவே, சமமான வண்ணத் தொனியை உருவாக்க உதவும் சிகிச்சைகளை மேற்கொள்ளுங்கள். வெயிலில் செல்வதற்கு முன் உங்கள் சருமத்தில் சன்ஸ்கிரீனை தடவவும். உங்கள் சருமம் எண்ணெய் நிறைந்ததாக இருந்தால், சன்ஸ்கிரீன் ஜெல்லைப் பயன்படுத்துங்கள். இதற்கு டான் எதிர்ப்பு சன்ஸ்கிரீன்கள் உள்ளன. மேக்-அப் ஒருவரை அழகாக பார்ப்பது மட்டுமல்லாமல், நல்ல உணர்வையும் தருகிறது. உதட்டுச்சாயம் அணிவது உண்மையில் உங்களது தோற்றத்தை உயர்த்துகிறது மற்றும் மனநிலையை மாற்றுகிறது என்று கூறப்படுகிறது. எனவே, தொற்றுநோய் முடிவடைந்து ஒப்பனை தயாரிப்புகள் மீண்டும் பிரபலமடையும் என்று ஒப்பனை வல்லுநர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

  MORE
  GALLERIES