நமது பல அன்றாட செயல்பாடுகள் நம் கைகளை பாதிக்கின்றன. நாள் முழுவதும் நமது கைகள் மிகவும் பிஸியாக இருக்கும். வேலைகளின் முழு பொறுப்பும் கைகளுடையது என்பதால் நமது உள்ளங்கைகள் கரடுமுரடாக மற்றும் உலர்ந்து காணப்படும். வறண்ட, விரிசலான சருமத்திற்கு அதன் பாதுகாப்பு வெளிப்புற அடுக்கில் ஏற்படும் சேதம் மிகவும் பொதுவான காரணமாகும். தவிர தீவிர , புற ஊதா கதிர்வீச்சு, சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட பிற காரணிகளும் உள்ளன. அன்றாட வேலைகளை செய்யும் போது நாம் பல முறை கைகளை கழுவுவதும் அவை பாதிக்க காரணம்.
மென்மையை இழந்து கரடுமுரடாக காணப்படும் கைகளை நிரந்தரமாக சாஃப்ட்டாக்குவது எப்படி என்று நீங்கள் யோசிக்கிறீர்களா.? இதற்காக நீங்கள் தோல் நிபுணர் அல்லது மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. கைகளின் மென்மையை மீட்டெடுக்க மற்றும் எப்போதுமே அவற்றை மென்மையாக வைத்திருக்க சில வழிகள் உள்ளன. அவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்..
தவறாமல் மாய்ஸரைஸ் செய்ய வேண்டும் : வழக்கமான அடிப்படையில் உங்கள் கைகளை மாய்ஸரைஸ் செய்வது அவசியம். கைகளை கழுவிய உடனேயே அவற்றை மாய்ஸரைஸ் செய்வது ஈரப்பதத்தை தக்க வைக்க மற்றும் உங்கள் உள்ளங்கைகளை மிருதுவாக வைக்க உதவும். உங்கள் கைகளை கழுவிய பின் ஒவ்வொரு முறையும் உங்கள் உள்ளங்கைகளை மாய்ஸரைஸ் செய்ய வேண்டும். இல்லை என்றால் அது உங்கள் கை சருமத்தின் இயற்கை ஈரப்பதம் அகற்றப்படும். எனவே உங்கள் சருமத்திற்கு மிகவும் பொருத்தமான மாய்ஸ்சரைசிங் க்ரீமை பயன்படுத்துங்கள்.
ஊட்டமளிக்கும் ஆயில்கள் (Nourishing Oils) : உங்கள் கைகள் மிகவும் வறண்டது போல தோன்றினால் Nourishing Oils பயன்படுத்துவது நன்மை தரும். இவற்றை பயன்படுத்துவது வறண்ட கைகளை ஆழமாக மற்றும் திறம்பட ஈரப்பதமுடன் வைக்கும். வீட்டிலிருக்கும் சமயங்களில் க்ரீம்களுக்கு பதில், தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் போன்ற ஊட்டமளிக்கும் எண்ணெய்களை பயன்படுத்துவது சிறப்பான பலன்களை தரும்.
பெட்ரோலியம் ஜெல்லி : அழகு நன்மைகள் முதல் காயங்களை குணப்படுத்துவது வரை பெட்ரோலியம் ஜெல்லியை பல வழிகளில் பயன்படுத்தலாம். காயம்பட்ட சருமத்தை குணப்படுத்த, அரிப்பை தடுக்க பெட்ரோலியம் ஜெல்லி மிகவும் உதவும். உங்கள் கைகளை வறண்டிருந்தால் பெட்ரோலியம் ஜெல்லியை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் கைகளை மென்மையாக மாற்றலாம்.
மைல்டான ஹேண்ட் வாஷ் பயன்படுத்தவும்: நீங்கள் பயன்படுத்தும் ஹேண்ட் வாஷை தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். ஃபேஸ் வாஷிற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதே அளவுக்கு ஹேண்ட் வாஷிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மைல்டான ஹேண்ட் வாஷ் பயன்படுத்துவது உங்கள் சருமத்தின் இயற்கை ஈரப்பதம் போகாது என்பதை உறுதி செய்யும்.
சன்ஸ்கிரீன் மறக்காதீர்கள்: சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் உங்கள் சருமத்திற்கு கடும் சேதத்தை ஏற்படுத்தும். எனவே உங்கள் முகத்திற்கு மட்டுமின்றி கைகளுக்கும் தாராளமாக சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும். கடுமையான வெயிலில்நீங்கள் வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும் கைகளுக்கும் சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும்.