உங்களுடைய சருமம் எண்ணெய் பிசிபிசுப்பு பேசும் உள்ளதாக இருந்தால், முட்டையின் வெள்ளை பகுதியோடு எலுமிச்சை சாறு சம அளவில் கலந்து, அதனை முகத்தில் தடவ வேண்டும் 20 நிமிடங்கள் காய விட்ட பிறகு அதனை தண்ணீரைக் கொண்டு கழுவி விடலாம். கடலை மாவு மற்றும் தயிர் ஆகியவற்றை கலந்து ஒரு பேஸ்ட்டை போல உருவாக்கி அதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்க்க வேண்டும். இதனை சோப்பிற்கு பதிலாக உடலுக்கு தேய்த்து குளிப்பதற்கு பயன்படுத்தலாம்.
வெயில் நேரத்தில் வெளியே செல்லும்போது சன் ஸ்கிரீன் பயன்படுத்தலாம். இரவு நேரத்தில் கிரீமை பயன்படுத்தி சருமத்தை மூன்று நிமிடங்கள் வரை தேய்க்க வேண்டும். அதன் பிறகு பருத்தி துணியை கொண்டு துடைத்து விடலாம்.இரவு நேரங்களில் உங்களது சருமம் மிகவும் வறண்டு இருந்தால் ஈரப்பதத்தை அதிகரிக்கும் வகையிலான கிரீமை முகத்தில் தேய்க்க வேண்டும். தேனானது வறண்ட சருமத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து ஒரு பேஸ்ட்டை போல மாற்றி அதனை முகத்தில் தடவி வர முகம் பிறந்த குழந்தையை போல மென்மையாக காட்சியளிக்கும். முட்டையின் வெள்ளை பகுதியையும் முகத்தில் தேய்த்து 20 நிமிடங்கள் வரை காய வைத்து அதன் பின்னர் கழுவி விட வேண்டும். கேரட்டை நன்றாக துருவி அதனை சருமத்தில் ஒரு மாஸ்கை போல தேய்த்து வர சருமம் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் கேரட்டில் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது.
முட்டைகோசை நீரினுள் நன்றாக கொதிக்க வைத்து பின்னர் அந்த திரவத்தை எடுத்து ஆற வைக்க வேண்டும். இதன் மூலம் முகத்தை கழுவும் போது சருமம் ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் இருக்கும். இரண்டிலிருந்து மூன்று டேபிள் ஸ்பூன் அளவு பாலை மிதமான அளவில் சூடு படுத்தி அதனோடு இரண்டு துளி வெஜிடபிள் ஆயில் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பருத்தித் துணியை அதில் முக்கிய எடுத்து சருமத்தை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்