கோடை காலத்தில் வியர்வை வழிந்தோடும் என்பதால் மேக்கப் போட்டு கொள்வதை பலரும் தவிர்க்கின்றனர். கடும் வெயில் நேரத்தில் சில முக்கிய மேக்கப் பிரச்சனைகளாக கேக்கி ஃபவுண்டேஷன்கள், ஸ்மட்ஜ்டு மஸ்காரா, ஸ்டிக்கி லிப்ஸ்டிக்ஸ் மற்றும் பல உள்ளன.மேக்கப் செட்டாவதற்கு முன்பே வியர்வை காரணமாக ஏற்படும் மேக்கப் சேதம் உங்களை அடிக்கடி சங்கடப்படுத்தலாம். இதற்கு மேக்கப் போடாமலே விட்டிருக்கலாமே என்று கூட நீங்கள் யோசிக்கலாம்.
ஆண், பெண் வேறுபாடின்றி அனைவரும் மேக்கப் போட்டு கொள்வது சகஜம் என்ற நிலையில் தற்போது இருக்கிறோம். கோடைகாலத்தில் ஈரப்பதம் மற்றும் வியர்வை காரணமாக மேக்கப் போடுவது அல்லது போட்டு கொள்வது எளிதானது அல்ல. கோடைக்காலத்தில் மேக்கப் பயன்படுத்தும் போது நினைவில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள் இருக்கின்றன. இங்கே உங்கள் மேக்கப்பை வியர்வை பாதிக்காதவாறு பாதுகாத்து கொள்வதற்கான ஸ்வெட்-ப்ரூஃப் ட்ரிக்ஸ்கள் பற்றி பார்க்கலாம்...
உங்கள் முகத்தை எப்போதும் மாய்ஸ்சரைஸ் செய்யுங்கள் : ஸ்டிக்கி ஃபீல் ஏற்படுகிறித்து என்பதற்காக பலர் தங்கள் முகத்தை மாய்ஸ்சரைஸ் செய்வதே இல்லை. ஆனால் மேக்கப் போடுவதற்கு உங்கள் முகத்தை மாய்ஸ்சரைஸ் செய்வது அவசியம். எண்ணெய் அல்லது கிரீம் அடிப்படையிலானவற்றுக்கு பதிலாக நீர் சார்ந்த மாய்ஸ்சரைசரை (water-based moisturiser) பயன்படுத்த வேண்டும்.
ப்ரைமர் அவசியம் : மேக்கப்பை நீண்ட நேரம் வைத்திருக்க ப்ரைமர் (Primer) பயன்படுத்துவது அவசியம். எனவே உங்கள் மேக்கப் கிட்டில் ப்ரைமர் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்திய 5 நிமிடங்களுக்குப் பிறகு ப்ரைமரை பயன்படுத்துங்கள். இதை பயன்படுத்திய 5 நிமிடங்களுக்கு பிறகு மேக்-அப்பை போட துவங்குவது சரியாக இருக்கும்.
லைட்டான ஃபவுண்டேஷன்: கோடை காலங்களில் லைட்டான ஃபவுண்டேஷனை பயன்படுத்துவது மிக முக்கியம். ஏனென்றால் ஹெவியான ஃபவுண்டேஷன் பயன்படுத்தினால் அடிக்கும் வெயிலுக்கு உங்கள் சருமம் மோசமான முறையில் எதிர்வினையாற்றலாம். மேலும் ஹெவி ஃபவுண்டேஷன் உங்கள் சரும துளைகளை அடைத்து, முகப்பருக்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
வாட்டர்-ப்ரூஃப் மஸ்காரா: சாதாரண மஸ்காராவை போல உங்கள் முகத்தில் எல்லா இடங்களிலும் இல்லாமல் வாட்டர்-ப்ரூஃப் மஸ்காரா பரவாது. சாதாரண மஸ்காராவை ஒரு கோட் மட்டுமே பயன்படுத்துவதை உறுதி செய்து, பின் 2 கோட் வாட்டர்-ப்ரூஃப் மஸ்காராவைப் பயன்படுத்தவும். இது உங்கள் கண் மேக்கப்பை ஹெவியாக்கி அது கலையாமல் இருப்பதை உறுதி செய்யும்.