நீர்ச்சத்து குறைபாடு : நம் உடலில் நீர்ச்சத்து குறைபாடு இருப்பதை நமது சருமம் காண்பித்துக் கொடுக்கும். பொதுவாக உதடுகளில் வெடிப்பு தென்படும் மற்றும் கருவளையம் அடர்த்தியானதாக காட்சியளிக்கும். நாள் முழுவதும் தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். குறிப்பாக தற்போதைய கோடை வெயில் உடலுக்கு குளிர்ச்சி தருகின்ற இயற்கை பானங்களை அருந்தலாம்.
இயற்கையான வழிமுறைகள் : கண்களை சுற்றியிலும் வெள்ளரிக்காய் வைத்துக் கொள்ளலாம் அல்லது ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த டீ அல்லது காஃபி பைகளை 10 முதல் 15 நிமிடங்கள் வைத்துக் கொள்ளலாம். பாதாம் எண்ணெய், ரோஸ்வாட்டர், தக்காளிச் சாறு போன்றவற்றை பருத்தி துணியில் நனைத்து கண்களை சுற்றி தடவி வந்தால் கருவளையம் நீங்கும்.