முகப்பு » புகைப்பட செய்தி » என்ன செய்தாலும் பருக்கள் முகத்தை கெடுக்குதா..?  நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள்தான் உங்களின் எதிரி..!

என்ன செய்தாலும் பருக்கள் முகத்தை கெடுக்குதா..?  நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள்தான் உங்களின் எதிரி..!

தவறான உணவு பழக்கம் பருக்களை உண்டாக்கி, இந்த பருக்கள் மறைந்த பிறகும் உங்கள் முகத்தில் கரும்புள்ளிகளையும் ஏற்படுத்தும்.

 • 17

  என்ன செய்தாலும் பருக்கள் முகத்தை கெடுக்குதா..?  நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள்தான் உங்களின் எதிரி..!

  முகப்பருக்கள் பெரும்பாலும் ஹார்மோன் மாற்றங்கள், ரசாயன பொருட்கள் பயன்பாடு, தூசி, மாசுக்களால் உருவதாக நம்பப்படுகிறது. ஆனால் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளும் பருக்களை ஏற்படுத்தும். தவறான உணவு பழக்கம் பருக்களை உண்டாக்கி, இந்த பருக்கள் மறைந்த பிறகும் உங்கள் முகத்தில் கரும்புள்ளிகளையும் ஏற்படுத்தும்.உங்கள் உணவு பட்டியலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

  MORE
  GALLERIES

 • 27

  என்ன செய்தாலும் பருக்கள் முகத்தை கெடுக்குதா..?  நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள்தான் உங்களின் எதிரி..!

  பால் பொருட்கள் : சீஸ், கொழுப்பு நீக்காத பால், தயிர் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற பொருட்களை உட்கொள்வது சிலருக்கு பருக்களை ஏற்படுத்தும். பசு பாலில் அமினோ அமிலங்கள் உள்ளன, அவை கல்லீரலை பாதிக்கும் ஐ.ஜி.எஃப் -1 ஐ உற்பத்தி செய்ய தூண்டுகின்றன, இது முகப்பருவின் வளர்ச்சியுடன் தொடர்புடையது. எனவே இதனால் பருக்கள் மற்றும் கழுத்தில் வீக்கங்கள் உருவாக்கும்.

  MORE
  GALLERIES

 • 37

  என்ன செய்தாலும் பருக்கள் முகத்தை கெடுக்குதா..?  நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள்தான் உங்களின் எதிரி..!

  சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் : பிரட், வெள்ளை பாஸ்தா, மைதா நூடுல்ஸ் போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் நிறைந்த உணவுகள் முகப்பருவைத் தூண்டும் என்று கூறப்படுகிறது. இந்த உணவுகளில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன, அவை உங்கள் இரத்த சர்க்கரை அளவை நேரடியாக பாதிக்கும். சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை தவறாமல் உட்கொண்டவர்களுக்கு முகப்பரு உருவாவதற்கு 30% அதிக ஆபத்து இருப்பதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. மேலும் கேக்குகள் சாப்பிட்டவர்களுக்கு 20% அதிக ஆபத்து உள்ளது.

  MORE
  GALLERIES

 • 47

  என்ன செய்தாலும் பருக்கள் முகத்தை கெடுக்குதா..?  நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள்தான் உங்களின் எதிரி..!

  சாக்லேட் : சாக்லேட்டுகள் சாப்பிட விரும்புகிறீர்களா? இது உங்களுக்கு கவலை அளிக்கும் விஷயமாக இருக்கலாம். ஏனெனில் 100 கிராம் சாக்லேட்டில் 30-40 கிராம் கொழுப்பு, 23 கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. கோகோ, பால் மற்றும் சர்க்கரை நிறைந்த சாக்லேட்டுகள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை தாக்கி முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுக்கு வலுவாக செயல்பட வைக்கும். இது உங்கள் முகத்தில் பருக்களை ஏற்படுத்தும்.

  MORE
  GALLERIES

 • 57

  என்ன செய்தாலும் பருக்கள் முகத்தை கெடுக்குதா..?  நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள்தான் உங்களின் எதிரி..!

  எண்ணெய் உணவுகள் : முகப்பருவால் அவதிப்படுபவர்களுக்கு பொதுவான அறிவுரை எண்ணெய்யில் பொறித்த உணவுகளை தவிர்த்து விடுவது தான். ஃப்ரைடு ரைஸ், பர்கர்கள், சிப்ஸ் போன்ற உணவுகள் உங்கள் எடையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் உங்கள் சருமத்தை முகப்பருக்களால் பாதிப்புக்குள்ளாக்கும். எனவே இவற்றை தவிர்த்து விடுவது நல்லது.

  MORE
  GALLERIES

 • 67

  என்ன செய்தாலும் பருக்கள் முகத்தை கெடுக்குதா..?  நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள்தான் உங்களின் எதிரி..!

  புரத பவுடர் : புரோட்டீன் பவுடர் பெரும்பாலும் ஜிம்மிற்குச் செல்லும் நபர்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது அவர்களின் தசைகளை வலுவாக்க உதவுகிறது. இது புரதங்கள் மற்றும் லுசின் மற்றும் குளுட்டமைன் போன்ற அமினோ அமிலங்களின் வளமான மூலமாகும். இது ஐ.ஜி.எஃப் -1 என்ற ஹார்மோனின் அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம். இந்த ஹார்மோனின் அதிகரித்த அளவு பருக்களை ஏற்படுத்தும்

  MORE
  GALLERIES

 • 77

  என்ன செய்தாலும் பருக்கள் முகத்தை கெடுக்குதா..?  நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள்தான் உங்களின் எதிரி..!

  ஒமேகா -6 கொழுப்பு உணவுகள் : நீங்கள் ஏற்கனவே முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்தை கொண்டிருந்தால், ஒமேகா -6 கொழுப்புகளைக் கொண்ட உணவுகளிலிருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும். இந்த உணவுகளில் சோயாபீன், கார்ன்ஃப்ளேக்ஸ், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பருப்புகள் அடங்கும். இவை உங்கள் சருமத்தில் அதிக எண்ணெய் உற்பத்திக்கு வழிவகுக்கும், மேலும் வலிமிகுந்த பருக்களை ஏற்படுத்தும்.

  MORE
  GALLERIES