புளியங்கொட்டையில் கூட அழகுப் பராமரிப்பு இருக்கா..? எப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம் என தெரிந்துகொள்ள கிளிக் பண்ணுங்க..!
புளியங்கொட்டையை வெயிலில் நன்கு காய வைத்து பொடி செய்து அந்த பொடியை ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து அதை சருமத்தில் அப்ளை செய்து வந்தால் உங்கள் சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.
Web Desk | March 16, 2021, 6:27 PM IST
1/ 7
புளி பல்வேறு வகையான உணவுகளின் சுவைகளை அதிகரிக்க பயன்படுகிறது. இது உங்கள் வீட்டில் தயாரிக்கப்படும் பானிபுரி அல்லது சாட் மாசாக்களில் கூட சேர்க்கலாம். சில உணவுகள் புளிப்பு சுவை இல்லையென்றால் சுவையாக இருக்காது. புளி விதைகளைப் பொறுத்தவரை உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் முற்றிலும் பயனுள்ளதாக இருக்கும் என்று பலருக்கு தெரியாது.
2/ 7
நம்மில் பலர்புளியங்கொட்டைகளை தூக்கி எறிந்து விடுகிறோம், அதற்கு பதிலாக, அந்த விதைகளை ஊறவைத்து அரைப்பதன் மூலம் எளிமையான ஃபேஸ் பேக் செய்யலாம், அல்லது புளியங்கொட்டையை வெயிலில் நன்கு காய வைத்து பொடி செய்தும் வைத்துக்கொண்டு தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தலாம். அதன் சில நன்மைகளை இங்கு தெரிந்து கொள்வோம்.,
3/ 7
சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கிறது : வயது மூப்பு மற்றும் செயற்கையான தயாரிப்புகள் காரணமாக சருமத்தின் தோல் தளர்வாக மாறக்கூடும். உங்கள் கன்னம் மற்றும் அதனை சுற்றியுள்ள சருமம் தளர்வாக இருப்பதை நீங்கள் கவனித்தால், புளியங்கொட்டைகளைப் பயன்படுத்துங்கள். புபுளியங்கொட்டைகளை பொடி செய்து, அதனுடன் சுத்தமான தேன் சேர்த்து ஃபேஸ் மாஸ்க் செய்து சருமத்தில் அப்ளை செய்யுங்கள். வாரம் மூன்று நாட்கள் புளிப் பொடியை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஒரு கப் தேநீர் அருந்தி வரலாம். இப்படி செய்து வந்தால் உங்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மை சரியாகும்.
4/ 7
சரும வறட்சியை அகற்ற உதவுகிறது : உங்களுக்கு வறட்சியான சருமம் இருந்தால், சருமத்தின் நீரேற்றத்தை பராமரிப்பது கடினமாக இருக்கும். குறிப்பாக கோடைகாலத்தில் லோஷன்கள் மற்றும் கிரீம்களை பயன்படுத்து மட்டும் வேலை செய்யாது. தினமும் காலையில் புளியங்கொட்டை தேநீர் அருந்துவதன் மூலம் உங்கள் சருமத்திற்கு நீரேற்றம் அளிக்கலாம். இது தோல் ஈரப்பதத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஹைலூரோனிக் அமிலமும் புளி விதையில் நிரம்பியுள்ளது.
5/ 7
இளமையான தோற்றத்திற்கு : சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள், கண்களை சுற்றியுள்ள சதை சுருக்கம் ஆகியவை வயதான தோற்றத்தின் பொதுவான அறிகுறிகள். வயதாவது இயற்கையானது என்றாலும், இதுபோன்ற அறிகுறிகளை தாமதப்படுத்த நீங்கள் இயற்கையான வழிகளில் முயற்சி செய்யலாம். புளியங்கொட்டைகளில் சருமத்தை இளமையாக வைத்திருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இது உங்கள் இளமையை தக்க வைத்து கொள்ள உதவுகிறது. தினமும் புளியங்கொட்டைகளைப் பயன்படுத்தி ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கவும். இதற்கு புளி விதை பவுடர், பப்பாளி பழ சாற்றை நன்கு கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம். இதேபோல வறண்ட சருமம் இருப்பவர்கள் பாலுடனும், எண்ணெய் பசை சருமம் இருப்பவர்கள் முல்தானி மிட்டி அல்லது கடலை மாவுடனும் சேர்த்து பயன்படுத்தலாம்.
6/ 7
பருக்களை குணமாக்க : உங்களுக்கு இயற்கையான பளபளப்பு மற்றும் வயதான அறிகுறிகளை தாமதப்படுத்துவது மட்டுமின்றி புளியங்கொட்டைகள் பருக்களை அகற்றவும் உதவுகிறது. புளியங்கொட்டைகளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இதனை பயன்படுத்தி வந்தால் பருக்கள் குறைந்து சருமம் பொலிவாகும். நிமோனியாவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களிலிருந்து உங்களைப் பாதுகாப்பதில் இது சிறப்பாக செயல்படுவது மட்டுமல்லாமல், அனைத்து வகையான சரும தொற்று பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் பெற உதவுகிறது.
7/ 7
புளியங்கொட்டையை வெயிலில் நன்கு காய வைத்து பொடி செய்து அந்த பொடியை ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து அதை சருமத்தில் அப்ளை செய்து வந்தால் உங்கள் சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.