சருமப்பாதுகாப்பில் சன்ஸ்க்ரீனின் பயன்பாடு பல ஆண்டுகளாகக் காணப்படுகிறது. சன் பர்ன்ஸ் எனப்படும் சூரிய வெப்பத்தால், சருமத்தில் ஏற்படும் பாதிப்பு முதல், சீரற்ற சரும நிறம் வரை, சன்ஸ்க்ரீன் பல விதங்களில் உதவியாக இருந்து வருகிறது. கடுமையான சூரியனின் கதிர் வீச்சிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க, சரும நிறத்தை தக்க வைக்க, சன்ஸ்கிரீன் கிரீம்களும், லோஷன்களும் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், எப்போதாவது, சன்ஸ்க்ரீன் பயன்பாடு உங்கள் சருமத்தில் ஆரோக்கியமானதா என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா?
தற்போது சந்தையில் எக்கச்சக்கமான சன்ஸ்க்ரீன்கள் கிடைக்கின்றன. பெரும்பாலும், இவை அனைத்திலுமே, உங்கள் சருமத்தை பாதிக்கக் கூடிய ரசாயனங்கள் உள்ளன. உங்கள் அழகான, மென்மையான சருமத்தை நீங்கள், ரசாயனம் நிறைந்த சருமத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சன்ஸ்க்ரீன்கள் பயன்படுத்தி சேதப்படுத்துவதை விரும்ப மாட்டீர்கள். எனவே, அதற்கு மாற்றாக, உங்களுக்கு இயற்கை கைகொடுக்கிறது. உங்கள் சருமத்தில் ரசாயனப் பொருட்கள் சேர்க்கப்பட்ட சன்ஸ்க்ரீன் பயன்படுத்தி, சரும பாதிப்பை விரும்பவில்லை என்றால், மிகச்சிறப்பாக பலனளிக்கும், மிக மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் இயற்கையான பொருட்கள் உள்ளன.
தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெய் சன்ஸ்க்ரீன் ஆக எப்படிப் பயன்படுத்த முடியும் என்று நீங்கள் நினைக்கலாம்? உணவுக்கு பிரத்யேக சுவையூட்டும் தேங்காய் எண்ணெய், 20% வரை சூரிய கதிர் வெப்பத்தின் தாக்கத்தைத் தடுக்கிறது. நீங்கள் அவசரமாக அல்லது குறைவான அளவில் வெளியே செலவிட இருந்தால், தேங்காய் எண்ணையை பயன்படுத்தலாம். கூடுதல் பலன்களாக, சருமத்தில் ஈரப்பதம் நீடித்திருப்பது, மென்மையான மாசு மருவற்ற சருமம், மற்றும் இளமையான தோற்றம் ஆகியவையும் நீங்கள் பெறுவீர்கள்.
கற்றாழை : சருமப்பாதுகாப்பு என்று நினைத்தாலே, கற்றாழையின் பயன்பாடு மற்றும் அற்புதமான பலன்கள் முதலிடத்தில் இருக்கும். சருமத்தில் ஈரப்பதத்தை நிலைக்கச் செய்வது முதல், இளமையான பட்டு போன்ற சருமத்தை வழங்குவது வரை கற்றாழையின் பயன்பாடுகள் எண்ணில் அடங்காதவை. சூரிய வெப்பத்தால் உங்கள் சருமத்தில் ஏற்படும் எரிச்சல், சன் பர்ன்ஸ், அழற்சி மற்றும் சருமம் சிவந்து போவது ஆகியவற்றுக்கு, வைட்டமின் டி நிறைந்த அலோ வெரா மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. கற்றாழை ஜெல் மிகவும் குளிர்ச்சியாக உணரச் செய்யும். இதனை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அற்புதமான பலன்கள் அளிக்கும் கற்றாழை மிக மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது மற்றும் வீட்டிலேயே மிகவும் சுலபமாக வளர்க்கலாம்.
ஷியா பட்டர் : சன்ஸ்க்ரீன் பயன்பாட்டில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது, அதன் SPF அளவு. ஷியா பட்டரில் SPF அளவு குறைவாக இருந்தாலும், அதிக நேரம் வெளியே செல்லாத நாட்களில், ஷியா பட்டரை சன்ஸ்க்ரீன் ஆக பயன்படுத்தலாம். வைட்டமின் ஏ மற்றும் ஈ நிறைந்த ஷியா பட்டர், உங்கள் சருமத்தில் பல நன்மைகளை உண்டாக்கும். மேலும், இதிலே ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ளதால், ஃப்ரீ ரேடிகல்ஸ் மற்றும் வயதாகும் அறிகுறிகளை தடுக்கும். மேலும், தோல் புற்றுநோயைத் தடுக்கும். ஷியா பட்டரை நேரடியாக சருமத்தில் பூசிக்கொள்ளலாம்.
பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் : இந்த இரண்டு எண்ணெய் வகைகளுமே, இந்தியாவில், வெவ்வேறு வடிவில் சமையல் பயன்பாட்டில் உள்ளன. சமீபத்தில் சில ஆண்டுகளில், பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் இரண்டுமே, சரும மற்றும் கூந்தல் மேம்படுவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எண்ணெய் வகைகளில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது, சருமத்தில் உறிஞ்சப்படும், எண்ணெய் பசை குறைந்த அளவே காணப்படும்.