முகப்பு » புகைப்பட செய்தி » தர்பூசணி சாறுடன் தேன்... வெயிலால் உண்டாகும் கருமையை நீக்க சூப்பர் ஃபேஸ் மாஸ்க்.!

தர்பூசணி சாறுடன் தேன்... வெயிலால் உண்டாகும் கருமையை நீக்க சூப்பர் ஃபேஸ் மாஸ்க்.!

அவ்வப்போது சில வீட்டுக் குறிப்புகளை முயற்சி செய்தால் மட்டுமே சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள முடியும். வெயிலினால் உண்டாகும் முகக்கருமையை நீக்க முடியும்.

  • 14

    தர்பூசணி சாறுடன் தேன்... வெயிலால் உண்டாகும் கருமையை நீக்க சூப்பர் ஃபேஸ் மாஸ்க்.!

    என்னதான் நாம் வெயில் படாமல் இருக்க ஸ்காஃப் அணிந்து முகத்தை மறைத்தாலும் அல்லது சன் ஸ்கீன் அப்ளை செய்தாலும் தப்பிப்பது கடினம். முகம் கருமை என்பது சம்மர் காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. அதற்காக நாம் அப்படியே விடுவதும் சருமத்தை பாதிக்கும். எனவே அவ்வப்போது சில வீட்டுக் குறிப்புகளை முயற்சி செய்தால் மட்டுமே சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள முடியும். முகக்கருமையை நீக்க முடியும். அப்படி முகக்கருமை போக தர்பூசணி பழத்தை இப்படி யூஸ் பண்ணி பாருங்க..

    MORE
    GALLERIES

  • 24

    தர்பூசணி சாறுடன் தேன்... வெயிலால் உண்டாகும் கருமையை நீக்க சூப்பர் ஃபேஸ் மாஸ்க்.!

    தர்பூசணி மற்றும் தேன் மாஸ்க் : தர்பூசணி சாருடன் தேன் கலந்து நன்கு கலந்துகொள்ளுங்கள். நன்கு மிக்ஸ் செய்துகொண்டே இருக்க கெட்டியான பதம் கிடைக்கும். பின் அதை முகம் , கை , கால்களில் தடவி அரை மணி நேரம் காய வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இப்படி தினமும் செய்தால் முகம் கருமை நீங்கி பளபளப்பாக மாறும்.

    MORE
    GALLERIES

  • 34

    தர்பூசணி சாறுடன் தேன்... வெயிலால் உண்டாகும் கருமையை நீக்க சூப்பர் ஃபேஸ் மாஸ்க்.!

    தர்பூசணி மற்றும் எலுமிச்சை : தர்பூசணி சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் மூன்றையும் நன்கு கலந்து பின் முகம் , கழுத்தை சுற்றி அப்ளை செய்யுங்கள். குறைந்தது 15 நிமிடங்கள் காய வையுங்கள். பின் தண்ணீரில் கழுவ முகம் பளிச்சென மாறும்.

    MORE
    GALLERIES

  • 44

    தர்பூசணி சாறுடன் தேன்... வெயிலால் உண்டாகும் கருமையை நீக்க சூப்பர் ஃபேஸ் மாஸ்க்.!

    தர்பூசணி மற்றும் தயிர் : சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்வதில் தர்பூசணி மற்றும் தயிர் இரண்டுமே சிறந்தது. எனவே தயிருடன் தர்பூசணி சாறு கலந்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் காய வையுங்கள். பின் முகத்தை கழுவுங்கள். இப்படி தினமும் செய்தால் கோடைக் கருமையை எளிதாக அகற்றிவிடலாம்.

    MORE
    GALLERIES