சன்ஸ்கிரீன் : சன்ஸ்கிரீன் என்பது சூரிய ஒளி கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க செயல்படுகிறது. ஏற்கனவே சருமத்தில் நுழைந்த சூரிய கதிர்வீச்சை உறிஞ்சுவதற்கு சருமத்தின் மேல் அடுக்கில் ஊடுருவி செயல்படுகிறது. எனவே வெயிலின் தாக்கத்தில் இருந்து சருமத்தை காக்கும் சன்ஸ்கிரீன், கோடை காலத்தில் அவசியத் தேவை. எண்ணெய் பசை சருமம் உடையவர்கள் ஜெல் டைப் சன்ஸ்கிரீனையும், நார்மல் சருமம் இருப்பவர்கள் லோஷன் டைப் சன்ஸ்க்ரீனையும், வியர்க்கும் சருமம் உடையவர்கள் வாட்டர் ப்ரூஃப் சன்ஸ்க்ரீனையும் பயன்படுத்தலாம். எஸ்.பி.எஃப் (Sun Protection Factor) அளவு 15 உள்ள சன்ஸ்க்ரீன், வெயிலில் இருந்து ஒரு மணி நேரம் சருமத்தைக் காக்கும். நமது கிளைமேட்டிற்கு எஸ்.பி.எஃப் 30 தேவை, அதேபோல பருக்கள் இருப்பவர்களுக்கென தனி சன்ஸ்கிரீன் உள்ளது.
பாடி லோஷன் : மென்னையான தண்ணீர்யுடன் உள்ள பாடி லோஷன்கள் எல்லா சருமத்திற்கும் ஏற்ற ஒன்றாக இருக்கும். வறண்ட மற்றும் எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு பாடி லோஷன் மிக சிறந்ததாகும். மிக வறண்ட சருமம் உள்ளவர்கள் பாடி பட்டர் பயன்படுத்தலாம். ஆனால் எண்ணெய் சருமம் கொண்டவர்கள் பாடி பட்டர் பயன்படுத்தக் கூடாது. மேலும் வறண்ட மற்றும் எண்ணெய் சருமம் இரண்டிற்கும் நடுவில் சாதாரண சருமம் கொண்டவர்கள் பாடி கிரீம்களை பயன்படுத்தலாம் உங்கள் உடலினை ஈரப்பத்துடன் வைப்பதற்காக தான் லோஷனை பயன்படுத்துறீங்கள். எனவே அவற்றை சரியான முறையில் பயன்படுத்துவது முக்கியம். ஷியா பட்டர், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்ற அத்தியாவசிய எண்ணெய்கள் கொண்ட லோஷன்களையும் பயன்படுத்தலாம்.
லிப் பாம் : லிப் பாம், வறண்ட உதடுகளுக்கு ஈரப்பதத்தை ஏற்படுத்தக்கூடியது. உதடு எளிதில் காய்ந்துவிடும் தன்மையைக் கொண்டிருக்கிறது. அதற்கான தீர்வுதான் லிப் பாம். புற ஊதாக் கதிரை எதிர்க்கும் எஸ்.பி.எஃப் தன்மை கொண்ட லிப் பாம் மூலம் உதடுகளைப் பாதுகாக்கலாம். எஸ்.பி.எஃப் 15, 20, 30 என மூன்று வகைகளில் கிடைக்கிறது. இதில் உங்கள் லைஃப்ஸ்டைலுக்கு பொருத்தமான ஒன்றைத் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.