முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இனி பணம் செலவு செய்து கடையில் மாய்ஸ்சரைசர் வாங்க வேண்டாம்.. வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்..!

இனி பணம் செலவு செய்து கடையில் மாய்ஸ்சரைசர் வாங்க வேண்டாம்.. வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்..!

homemade moisturizers to treat dry skin : வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து மிகவும் எளிமையான முறையில் வீட்டிலேயே மாய்ஸ்சரைசர் தயாரிக்கலாம். எப்படி என இந்த தொகுப்பில் நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

  • 19

    இனி பணம் செலவு செய்து கடையில் மாய்ஸ்சரைசர் வாங்க வேண்டாம்.. வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்..!

    how to make moisturizer for face at home : வெயில் காலமோ… குளிர் காலமோ… எந்த காலமாக இருந்தாலும் சரும ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். சரும வறட்சி, பருக்கள், ஆகியவற்றை கட்டுப்படுத்த மாய்ஸ்சரைசர் மிகவும் அவசியம். சருமம் வறட்சியாக இருந்தால், சரும வெடிப்பு, அரிப்பு, சருமம் சிவத்தை போன்றவை ஏற்படும். அதற்காக, ஆயிரக்கணக்கில் செலவு செய்து மாய்ஸ்சரைசர் வாங்குங்கள் என நாங்கள் கூறவில்லை. வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து மிகவும் எளிமையான முறையில் வீட்டிலேயே மாய்ஸ்சரைசர் தயாரிக்கலாம். எப்படி என இந்த தொகுப்பில் நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

    MORE
    GALLERIES

  • 29

    இனி பணம் செலவு செய்து கடையில் மாய்ஸ்சரைசர் வாங்க வேண்டாம்.. வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்..!

    தேன் + தேங்காய் எண்ணெய் : ஒரு ஸ்பூன் தேனுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து வறட்சியான சருமத்திற்கு தடவி 20 - 30 நிமிடங்களுக்கு உலர விட்டு, பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி சுத்தம் செய்துவிடவும்.

    MORE
    GALLERIES

  • 39

    இனி பணம் செலவு செய்து கடையில் மாய்ஸ்சரைசர் வாங்க வேண்டாம்.. வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்..!

    கற்றாழை ஜெல் : இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் போதுமான அளவு தேன் சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ள சரும வறட்சி பிரச்சனைக்கு தீர்வு தரும் இயற்கை Moisturizer தயார்.

    MORE
    GALLERIES

  • 49

    இனி பணம் செலவு செய்து கடையில் மாய்ஸ்சரைசர் வாங்க வேண்டாம்.. வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்..!

    தேன் + வாழைப்பழம் : நன்கு பழுத்த வாழைப்பழத்தை மசித்து 2 ஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். பின் இதனுடன் போதுமான அளவு தேன் சேர்த்து பேஸ்ட் போல் தயார் செய்துக்கொள்ள சரும வறட்சியை போக்கும் இயற்கை மாய்ஸ்சரைசர் தயார்.

    MORE
    GALLERIES

  • 59

    இனி பணம் செலவு செய்து கடையில் மாய்ஸ்சரைசர் வாங்க வேண்டாம்.. வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்..!

    பாதாம் எண்ணெய் : முட்டையின் மஞ்சள் கருவுடன் போதுமான அளவு பாதாம் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் போல் தயார் செய்து, வறட்சியான சருமத்திற்கு மாய்ஸ்சரைசர் ஆக பயன்படுத்தி வர நல்ல மாற்றம் தெரியும்.

    MORE
    GALLERIES

  • 69

    இனி பணம் செலவு செய்து கடையில் மாய்ஸ்சரைசர் வாங்க வேண்டாம்.. வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்..!

    பட்டர் ஃபுரூட் : ஒமோகா - 3 கொழுப்பு அமிலத்தின் சிறந்த மூலமாக இருக்கும் வெண்ணை பழத்தின் திப்பைகளை சிறிதளவு ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து பேஸ்ட் போல் தயார் செய்துக்கொள்ள சரும வறட்சியை போக்கும் இயற்கை மாய்ஸ்சரைசர் தயார்.

    MORE
    GALLERIES

  • 79

    இனி பணம் செலவு செய்து கடையில் மாய்ஸ்சரைசர் வாங்க வேண்டாம்.. வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்..!

    தேனுடன் சாக்லேட் : டார்க் சாக்லேட் துண்டுகள் இரண்டுடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் போல் தயார் செய்து வறட்சி நிறைந்த சருமத்திற்கு மாய்ஸ்சரைசர் ஆக பய்னபடுத்தி வர சரும வறட்சி பிரச்சனைகள் நீங்கும்.

    MORE
    GALLERIES

  • 89

    இனி பணம் செலவு செய்து கடையில் மாய்ஸ்சரைசர் வாங்க வேண்டாம்.. வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்..!

    பப்பாளி பழம் : நன்கு பழுத்த பப்பாளி பழத்தில் விதைகளை நீக்கி பழத்தின் திப்பைகளை மட்டும் நன்கு குழைத்து பேஸ்ட் போல் தயார் செய்யவும். பின்னர், வறட்சியான சருமத்திற்கு பயன்படுத்தி மசாஜ் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

    MORE
    GALLERIES

  • 99

    இனி பணம் செலவு செய்து கடையில் மாய்ஸ்சரைசர் வாங்க வேண்டாம்.. வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்..!

    ஓட்ஸ் : 2 ஸ்பூன் ஓட்ஸுடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் தயார் செய்துக்கொள்ள சரும வறட்சியை போக்கும் இயற்கை Moisturizer தயார். இந்த மாய்ஸ்சரைசரை (Moisturizer) தினமும் குளியலுக்கு பின்னர் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும்.

    MORE
    GALLERIES