பெண்கள் தங்களது முகத்தை அழகாகப் பராமரிப்பதற்காக பல முயற்சிகளை எடுப்பார்கள். இதற்காக பாசிப்பயறு, மஞ்சள் தொடங்கி அழகு நிலையங்களுக்கும் செல்வதையெல்லாம் நாம் பார்த்திருப்போம். இவ்வாறு முகத்தை அழகாக்குவதற்கு மெனக்கெடும் பெண்கள் பலர் தன்னுடைய பாதங்களை மறந்துவிடுகிறீர்கள். ஆம் பித்த வெடிப்பு, கால் நகங்களில் பாதிப்பு என எத்தனை நாள்கள் இருந்தாலும் நம்மில் பலர் அதனைக் கண்டுகொள்வதில்லை. இதுப்போன்றவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இதோ உங்களுக்கான செய்தி தான் இது. உங்களது கால்களையும், பாதங்களையும் அழகாக்குவதற்கு நீங்கள் ப்யூட்டி பார்லர் செல்ல வேண்டாம். வீட்டிலேயே வாரத்திற்கு ஒரு முறை பாதத்தை சுத்தம் செய்யும் செயலான பெடிக்யூர் நீங்கள் செய்யலாம். இவ்வாறு நீங்கள் செய்யும் போது உங்களது பாதங்களில் உள்ள அழுக்குகள் சேர்வது மற்றும் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும். இதோ எப்படி என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.
நெயில் பாலிஷை அகற்றி நகங்களை வெட்டவும் : பெடிக்யூர் மூலம் நம்முடைய கால்களை சுத்தம் செய்யும் போது முதலில் நாம் நகங்களை சரியாக வெட்ட வேண்டும். பின்னர் நகங்களை ஷார்ப் செய்து நெயில் ரிமூவரின் உதவியுடன் நகங்களில் உள்ள பழைய நெயில் பாலிஷை அகற்ற வேண்டும். பின்னர் உங்களுக்கு விருப்பமான நெயில் பாலிஷ் நீங்கள் உபயோகிக்கலாம்.
கால்களுக்கு மசாஜ் செய்யவும் : கால்களில் உள்ள அழுக்குள் மற்றும் தொற்றுகள் நீங்குவதற்கு அவற்றிற்கு மசாஜ் செய்ய வேண்டும். இதற்காக உங்களது கால்கள் கொஞ்சம் கிரீம் அல்லது தேனை கலந்து மசாஜ் செய்யலாம். பின்னர் சூடான நீரில் எலும்பிச்சை சாறு கலந்து கால்களை சிறிது நேரம் உள்ளே வைத்து மசாஜ் செய்யும் போது கால்களில் உள்ள அழுக்கள் விரைவாக சுத்தம் செய்யப்படும்.
இதையடுத்து உங்களில் கால் விரல்களில் ஏதேனும் பாதிப்பு இருக்கும் பட்சத்தில், எலுமிச்சை துண்டுகளைக் கொண்டு கால்களில் தேய்க்கவும். பின்னர் , 1 டீஸ்பூன் எலுமிச்சை + 2 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் ½ டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைக் கொண்டு உங்களது பாதங்களை நன்றாக தேய்த்து மென்மையான துண்டினால் துடைக்க வேண்டும். பின்னர் சூடான தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்தி சுமார் 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்.
இதற்கு 3 ஸ்பூன் சூடான தேங்காய் எண்ணெய் பயன்படுத்தவும். ஐந்து நிமிடம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும். பின்னர் சூடான துண்டை உங்கள் கால்களில் இறுதியில் உங்களுக்கு விருப்பமான நெயில் பாலிசுகளை நீங்கள் உபயோகிக்கலாம். இதுப்போன்று நீங்கள செய்யும் முறை உங்களது கால்களை மற்றும் பாதங்களை பிற தொற்றுகளிலிருந்து பாதுகாப்பதோடு அழகாகவும் மாற்றுகிறது.