தற்போது குளிர்காலம் மறைந்து பல பகுதிகளில் கோடைகால வெயில் கொஞ்சம் கொஞ்சமாக அடிக்க துவங்கி இருக்கிறது. இந்த கிளைமேட் மாற்றத்திற்கு நடுவே உங்கள் சருமம் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். உங்கள் சருமம் வறண்டு போவது அல்லது கரடுமுரடாவது உள்ளிட்ட சரும சிக்கல்களை நீங்கள் சந்தித்து வருகிறீர்களா? பின்வரும் முக்கிய டிப்ஸ்களை பயன்படுத்தி மிருதுவான சருமத்தை பெறலாம். உங்கள் சருமம் பட்டு போல பிரகாசிக்க மற்றும் இறகை போல சாஃப்டாக இருக்க உதவும் வழிமுறைகள் இங்கே..
சரும பாதுகாப்பு : குளிர்காலத்தில் கூட உங்கள் சருமத்திற்கு UV பாதுகாப்பு தேவை. அந்த வகையில் வருவது கோடைகாலம் என்பதால் கடும் வெப்பத்தை உமிழும் சூரிய ஒளியில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாத்து கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் சூரிய ஒளியில் உள்ள UV light கதிர்கள் ஈரப்பதத்தை உறிஞ்சி சரும சேதத்திற்கு வழிவகுக்கலாம்.
ஹாட் ஷவரை தவிர்க்கவும் : குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பது ஓகே. ஆனால் சிலர் கோடை அல்லது கோடைக்கு முன்பு கூட சூடான தண்ணீரில் குளிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். ஆனால் சூடான நீர் சருமத்தின் ஈரப்பதத்தை நீக்குகிறது. எனவே அதிக சூடான நீரில் குளிப்பதற்கு பதில் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம். குளித்த பிறகு ஹார்டான டவலை பயன்படுத்தி உடலை துடைப்பதற்கு பதில் சாஃப்டான டவலை பயன்படுத்துங்கள்.
ஹியூமிடிஃபையர்ஸ் பயன்படுத்தவும் : குளிர்காலத்தில் சருமத்தை மிருதுவாக வைக்க முக்கிய வழி வசிக்கும் அறையில் ஹியூமிடிஃபையர்ஸ் ( Humidifiers) பயன்படுத்துவது. ஏனென்றால் ஹீட்டர்கள் இயற்கையான ஈரப்பதத்தை நீக்கி காற்றை உலர்த்துகின்றன. இது சரும வறட்சி மற்றும் சருமத்தை டிஹைட்ரேட்டாக்குகின்றன. எனவே காற்றில் ஈரப்பதத்தை மீண்டும் சேர்க்க எப்போதும் ஹியூமிடிஃபையர்ஸ் பயன்படுத்தவும்.
டயட் & ஒர்கவுட் : சீசன் எதுவாக இருந்தாலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த உணவுகளை டயட்டில் அதிகமாக சேர்க்க வேண்டும். தினசரி 30 - 45 நிமிட ஒர்கவுட் உங்கள் சரும ஆரோக்கியத்திற்கும் முக்கியம். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து தோல் செல்களை வளர்க்கிறது மற்றும் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்துகிறது.
ரஃப்பான துணிகளை தவிர்க்கவும் : இறுக்கமான அல்லது ரஃப்பான ஆடைகள் அணிவதை தவிர்த்து விடுங்கள். குளிர்காலத்தில் இறுக்கமான துணிகள் சருமத்தை எரிச்சலூட்டுவது மட்டுமல்லாமல் ஏற்கனவே வறண்டு இருந்தால் நிலைமையை இன்னும் மோசமாக்கும். எனவே நீங்கள் சரியான பிட் கொண்ட அதே சமயம் மென்மையான, வசதியான ஆடைகளை அணிய எப்போதும் முக்கியத்துவம் கொடுங்கள்.