கோடை காலம் என்றாலே விடுமுறையும், வெயிலும் தான் நம் நினைவிற்கு வரும். விடுமுறை நமக்கு கொண்டாட்டமாக இருந்தாலும், சுட்டெரிக்கும் கோடை வெயில் பல பிரச்சனைகளை தன்னுடன் கொண்டு வருகிறது. அந்த மாதிரியான ஒரு பிரச்சனை தான் உதடுகளில் ஏற்படும் வறட்சி. பொதுவாக கோடை காலத்தில் உள்ள அதிகப்படியான வெப்பம் மற்றும் சூரிய கதிர்கள் காரணமாக உதடுகள் வறண்டு, விரிசல் விட ஆரம்பிக்கும். இது பல அசௌகரியங்களை ஏற்படுத்தும். கோடை வெயிலில் இருந்து உங்கள் உதடுகளை பாதுகாக்க உதவும் ஒரு சில வழிகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
முடிந்த வரை, பீஸ்வேக்ஸ், ஷியா வெண்ணெய், அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்களால் ஆன லிப் பாம்களை பயன்படுத்துங்கள். ஏனெனில், இவை உங்கள் உதடுகளுக்கு போதுமான நீரேற்றம் வழங்க உதவும். நீங்கள் விருப்பப்பட்டால் வீட்டிலே இயற்கையான முறையில் எளிதில் கிடைக்கஓடிய பொருட்களைப் பயன்படுத்தி லிப் பாம்களை செய்து பயன்படுத்தலாம்.