ஆனால் சில நேரங்களில் நம் செபாசியஸ் சுரப்பிகள் அதிக அளவு எண்ணெயை உற்பத்தி செய்ய கூடும். இதனால் உங்கள் சருமம் ஆயில் மூலம் ஷைனிங்காக இருக்கலாம் அல்லது முகப்பருக்கள் போன்ற சரும பிரச்சைனகள் ஏற்படலாம். உங்கள் சருமம் ஆய்லி T-zone கொண்டதாக இருந்தால் எளிதாக முகப்பருவால் பாதிப்படும் மற்றும் சருமம் க்ரீஸியாக தோற்றமளிக்கும்.
முகத்தை வாஷ் செய்யவும் : உங்கள் சருமம் Oily T-zone-ஆக இருந்தால் உங்களது முகத்தை வழக்கமான அடிப்படையில் சுத்தம் செய்து கொள்வதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். பகல் நேரத்தில் உங்கள் சருமத்தில் சேர்ந்திருக்கும் அசுத்தங்களை அகற்ற மற்றும் முகத்தில் அதிகப்படியான எண்ணெய் அடைவதை தடுக்க குறைந்தது ஒரு நாளைக்கு 2 முறையாவது உங்கள் முகத்தை வாஷ் செய்து கொள்ளுங்கள்.
பவுடர்ட் சன்ஸ்கிரீன்: உங்கள் முகத்தில் ஆயிலால் ஏற்படும் ஷைனிங்கைஎதிர்த்து போராட, நீங்கள் லிக்விட் அல்லது ஸ்ப்ரே அடிப்படையிலான சன்பிளாக்கை (sunblock) தவிர்த்து விட்டு பவுடர்ட் ஃபார்முலாவிற்கு மாறுங்கள். எனினும் பவுடர் சன்ஸ்கிரீன் புற ஊதா கதிர்களுக்கு எதிரான போதுமான பாதுகாப்பை வழங்காது. எனவே நீங்கள் சன் பிளாக் க்ரீமைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளலாம் மற்றும் T-zone-ல் மட்டும் அல்லாமல் உங்கள் முகம் முழுவதும் பவுடரை பூசலாம்.
ப்ளோட்டிங் பேப்பர் பயன்படுத்தவும் : ப்ளோட்டிங் பேப்பர்கள் இயற்கையிலேயே உறிஞ்சும் தன்மை கொண்டது மற்றும் உங்கள் சருமத்தில் இருக்கும் கூடுதல் எண்ணெயை அகற்றும். உங்கள் சருமத்தில் எண்ணெய் இருக்கும் பகுதியில் ப்ளோட்டிங் பேப்பர் கொண்டு மெதுவாக அழுத்தி எக்ஸ்ட்ரா ஆயிலை அகற்றவும். முகத்தின் மற்ற பகுதிகளில் சீபம் பரவுவதை தடுக்க பேப்பரை தேய்ப்பது அல்லது பரப்புவதை தவிர்க்கவும்.
பேக்கிங் சோடா: உங்களுக்கு oil T-zone இருந்தால் பேக்கிங் சோடா பயன்படுத்துவது சிறந்த பலன்களை தரும். பேக்கிங் சோடா மற்றும் தண்ணீரை சம அளவு கலந்து முகத்தில் ஃபேஸ் மாஸ்க் போல அப்ளை செய்யவும். இத மிக்ஸை முகத்தில் மெதுவாக ஸ்க்ரப் செய்யவும். சில நிமிடங்களுக்கு பிறகு உங்கள் முகத்தை கழுவவும், எண்ணெய் உற்பத்தி குறைந்து, பிளாக்ஹெட்ஸ் சாஃப்ட்டராக மாறியிருப்பதை காண்பீர்கள்.
DIY ஃபேஸ் மாஸ்க் : எண்ணெய் வழியும் சரும பிரச்சனையை சமாளிக்க வீட்டிலேயே நீங்கள் ஃபேஸ் மாஸ்க் தயாரித்து பயன்படுத்தலாம். கால் கப் தயிர் எடுத்து கொள்ளுங்கள், கால் கப் மேஷ்டு ஸ்ட்ராபெர்ரிக்கள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் உள்ளிட்டவற்றை கலக்கவும். இந்த மிக்சிங்கை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் நன்கு தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவவும். இது உங்கள் சருமத்தில் சிறந்த விளைவை ஏற்படுத்தும் மற்றும் போர்ஸ்களை டைட் செய்யும்.