ஒவ்வொரு வயதிற்கு ஏற்ப சருமத்தில் மாற்றங்களும் , பிரச்சனைகளும் வரலாம். இது ஹார்மோன் சமநிலையின்மை, ஊட்டச்சத்து குறைபாடு , டயட் அல்லது வேறு ஏதேனும் உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம். குறிப்பாக பெண்கள் எத்தனை வயதைக் கடந்தாலும் முகப்பருவால் அவஸ்தையை அனுபவிக்கின்றனர். இது முக அழகையே கெடுத்துவிடும். 30, 40 வயதிலும் முகப்பரு என்பது சற்று கடினமான விஷயம்தான். இந்த பருக்கள் ஏன் உண்டாகின்றன. இதற்கு என்ன செய்யலாம் என சரும நிபுணர் அஞ்சால் பந்த் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் என்ன குறிப்பிட்டுள்ளார் என்பதை பார்க்கலாம்.