பயணம் என்பது ஒவ்வொரு வாழ்க்கையில் நிகழும் அற்புத தருணமாகும். வேலைக்காக பயணம் செய்வது ஒரு புறம் இருந்தாலும் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சிறிய பயணம் அல்லது நெடுந்தூரப் பயணம் மேற்கொள்வது என்பது மகிழ்ச்சியைக் கொடுக்கும். இதற்காக புதிய துணிகளை வாங்குவது முதல் சூட்கேஸ் அல்லது டிராவல் பேக்குகளைத் தயார் செய்வது வரை பணிகளை விறுவிறுப்பாக செய்வோம். மேலும் இதுவரை செல்லாத புதிதாக எந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் என தேடல் ஆரம்பிப்போம். மேலும் பிடித்த இடங்களில் புகைப்படங்களை எடுத்தும் மகிழ்வது வழக்கமான ஒன்று.
இவ்வாறு வெளியில் செல்வது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தாலும், மாசு மற்றும் தூசியின் காரணமாக சருமம் தொய்வடைந்துக் காணப்படும். இந்நேரத்தில் சரியான தோல் பராமரிப்பு என்பது அவசியமான ஒன்று. எனவே இந்நேரத்தில் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து அழகுக்கலை நிபுணர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம். பயணத்தின் போது முக பராமரிப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்.
மாய்ஸ்சரைசர் பயன்படுத்துதல் : வெயில் காலத்தில் மட்டுமில்லை குளிர்காலத்திலும் உங்களது சருமம் வறண்டு போகும். எனவே நீங்கள் எப்போதும் பயணம் செய்தாலும் உங்களுடன் மாய்ஸ்சரைசரை எடுத்துச் செல்ல வேண்டும். இது சருமத்தில் உள்ள அழுக்கு, தூசிகள் பாதிப்பு ஏற்படுத்தாமல் தடுக்கிறது. எனவே முகத்தை நீங்கள் கழுவியவுடன் ஈரப்பதத்துடன் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும். இது சருமத்துளைகளில் ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதோடு, மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெறுவதற்கு உதவியாக உள்ளது.
சன்ஸ்கிரீன் : சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க எப்போதும் உயர்தர சன்ஸ்கிரீனைப் பாதுகாக்க எப்போதும் உயர்தர சன்ஸ்கிரீனை நீங்கள் எங்கு சென்றாலும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். இது தோலில் சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்கிறது மற்றும் பயணத்தின் போது எவ்வித சரும பாதிப்பும் இல்லாமல் அதிக நேரம் நீங்கள் செலவிடலாம். இருந்தப்போதும் ஒவ்வொரு சில மணி நேரங்களுக்கு நீங்கள் சன்ஸ்கிரீனை உபயோகித்தால் கூடுதல் பாதுகாப்பாக அமையும். இதுப்போன்ற விஷயங்களை நீங்கள் எங்கு பயணம் செய்தாலும் உடன் எடுத்துச் சென்றால், நிச்சயம் உங்களது சருமம் பளப்பளப்புடன் மற்றும் உற்சாகத்துடன் காட்சியளிக்க உதவியாக இருக்கும்.