ஆனால் குளிப்பதன் மூலமாக உங்களுக்கு பளபளக்கும் மேனி கிடைக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம், நம் முன்னோர்கள் குளிக்கும்போது ஒரு சில பொருட்களை பயன்படுத்துவதன் மூலமாகவே தங்களது சரும ஆரோக்கியத்தை கவனித்துக் கொண்டனர். இது சரும அழகை பராமரிப்பதுடன், சருமத்தை பல விதமான நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. இதன் அடிப்படையில், பூக்கள், மூலிகைகள், எண்ணெய் மற்றும் வேர் போன்ற பொருட்கள் குளிக்கும்போது பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டது. அப்படியான சில பொருட்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
நர்கீஸ் பூக்கள் : நர்கீஸ் பூக்களில் இருந்து பெறப்படும் அத்தியாவசிய எண்ணெய் மிகவும் அரிதானது மற்றும் விலைமதிப்பற்றது. இந்த பூக்கள் அமைதிப்படுத்தும் விளைவுகளையும், அதே சமயம் அற்புதமான நறுமணத்தையும் அளிக்கிறது. இது சருமத்தை ஹைட்ரேட்டாக வைப்பதுடன் சரும ஆரோக்கியத்தை கவனித்து கொள்வதன் மூலம் பலவித நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
குங்குமாதி தைலம் : குங்குமாதி தைலம் என்பது பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் ஒரு ஆயுர்வேத எண்ணெயாகும். இது ஏராளமான சரும நன்மைகளை வழங்குகிறது. இந்த தைலத்தில் குங்குமப்பூ, சந்தனம், வெட்டிவேர், நல்லெண்ணெய், மஞ்சள், ரோஸ் எண்ணெய், மனிஷா, பாதாம் எண்ணெய் போன்ற பல பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இது சருமத்தை இளமையாக, ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. குங்குமாதி தைலத்தில் ஆன்டி-ஏஜிங் மற்றும் நீரேற்ற பண்புகள் காணப்படுகிறது. இது சருமத்தை பொலிவூட்டுவதுடன், சருமத்தை இறுக்கமாக்குவதன் மூலமாக அதன் இளமை தோற்றத்திற்கு உதவுகிறது.
நாகர்மோதா : நாகர்மோதா சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்த உதவுகிறது. இது சருமத்தின் அடைப்பட்ட துளைகளை சரி செய்வதன் மூலமாக வயதாகும் அறிகுறிகளை தடுக்கிறது. அதோடு இதிலுள்ள ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் சருமத்தை தொற்றுகளில் இருந்து காப்பாற்றுகிறது. நாகர்மோதா சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சரும தொனியை மேம்படுத்துகிறது.
பிரிங்கராஜ் ஆயில் : துளசி எண்ணெய் என்றும் அழைக்கப்படும் பிரிங்கராஜ் எண்ணெய் சரும ஆரோக்கியத்திற்கு பெயர் போன ஒரு எண்ணெய். இது சருமத்தை ஆழமாக சுத்தம் செய்து சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்கை போக்க உதவுகிறது. கண்களுக்கு கீழ் ஏற்படும் கருவளையத்தை போக்க இது சிறந்தது. சரும செல்களுக்கு சேதம் ஏற்படுத்தக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களுக்கு எதிராக இந்த எண்ணெய் செயல்படுகிறது. இதன் மூலம் சருமத்திற்கு இளமை தோற்றத்தை அளிக்கிறது.
சந்தனம் : சந்தனம் என்பது ஏராளமான நன்மைகள் மற்றும் நறுமணத்திற்கு சிறந்தது. சந்தனம் சருமத்தை ஆற்றும் பண்புகளைக் கொண்டுள்ளதால் இது தழும்புகள், கரும்புள்ளிகளை போக்க உதவுகிறது. மேலும் இது சரும அழுக்குகளை போக்கி சரும பொலிவை அளிக்கிறது. சந்தனத்தில் உள்ள ஆன்டி-இன்ஃபிளமேட்டரி பண்புகள் காரணமாக இது சன்பர்ன் மற்றும் ரேஷஸ்களை போக்குகிறது.
பாதாம் எண்ணெய் : இந்த ஆயில் வறண்ட சருமம், தழும்புகள் மற்றும் சரும மீளுருவாக்கத்திற்கு உதவுகிறது. ஆயுர்வேதம் மற்றும் சீன மருத்துவத்தில் தோலில் ஏற்படும் வெட்டுக்காயம் மற்றும் சிறிய புண்களைக் குணப்படுத்த இது உதவுகிறது. பாதாம் பருப்பில் உள்ள உயர் ஊட்டச்சத்து காரணமாக இது சருமத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. மேலும் வீக்கம், UV சேதம் போன்றவற்றிற்கும் பாதாம் எண்ணெய் உதவுகிறது.