மழைக்காலம் ஈரப்பதத்தைக் கொண்டு வருகிறது. இது குறிப்பாக சென்சிடிவ் சரும வகைகளை கொண்டவர்களுக்கு தோல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். கோடைகாலத்தில் பருவமழை பெய்தால் நாம் அனைவரும் மகிழ்வோம். ஆனால் இது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என உங்களுக்கு தெரியுமா? மழைக்காலம் ஈரப்பதம் அதிகரிக்கும், இந்த ஈரப்பதம் ஆரோக்கியமான சருமத்தை பாதித்து முகத்தில் பிரேக்அவுட்கள், பருக்கள் போன்றவை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் தோல் பராமரிப்பு மிகவும் முக்கியமானது. லவ் எர்த் நிறுவனர் பரிதி கோயல், மழைக்காலத்தில் பின்பற்றக்கூடிய தோல் பராமரிப்பு முறைகளை பகிர்ந்துள்ளார். அவை குறித்து இங்கு காண்போம்.
* உங்கள் சருமம் எண்ணெய் பசை சருமமாக இருந்தால், அது முகப்பரு, கட்டிகள், வைட்ஹெட்ஸ் மற்றும் பிளாக்ஹெட்ஸ் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். அதனால் மழைக்காலத்தில் எண்ணெய் பசை சேருவதை தவிர்த்து விடுங்கள். இதற்கு கடலை மாவு பயன்படுத்தி தினமும் குளிக்கலாம். எண்ணெய் தன்மை இல்லாத இயற்கை சோப் மற்றும் முகம் கழுவும் பேஸ்வோஷ்களை உபயோகிக்கலாம்.
* சமூக வலைத்தளங்களில் பரவும் ஸ்கின் கேர் டிப்ஸ்களை அடங்கிய DIY வீடியோக்களை பார்த்து அவற்றை அதிகம் பயன்படுத்தாதீர்கள். தக்காளி, எலுமிச்சை போன்றவற்றை உங்கள் சருமத்தில் நேரடியாகப் பயன்படுத்துவது சிலருக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். முகப்பரு, கருமை போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் கவனமாக இருங்கள்.