முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » ரெட்டினோல், சாலிசிலிக், ஹைலுரோனிக்.. இந்த அமிலங்கள் சருமத்திற்கு செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

ரெட்டினோல், சாலிசிலிக், ஹைலுரோனிக்.. இந்த அமிலங்கள் சருமத்திற்கு செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

அமிலங்கள் இறந்த சரும செல்களை அகற்றி, சருமத் துளைகளை அடைத்து, சரும அமைப்பை மேம்படுத்துவதன் மூலம் சருமத்தை மேம்படுத்தவும், பளபளப்பாக மாற்றவும் உதவுகிறது.

  • 114

    ரெட்டினோல், சாலிசிலிக், ஹைலுரோனிக்.. இந்த அமிலங்கள் சருமத்திற்கு செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

    அமிலங்கள் இறந்த சரும செல்களை அகற்றி, சருமத் துளைகளை அடைத்து, சரும அமைப்பை மேம்படுத்துவதன் மூலம் சருமத்தை பளபளப்பாக மாற்ற உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 214

    ரெட்டினோல், சாலிசிலிக், ஹைலுரோனிக்.. இந்த அமிலங்கள் சருமத்திற்கு செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

    சருமப் பராமரிப்பு பொருட்கள் மற்றும் பல்வேறு அமிலங்கள் குறிப்பிட்ட சருமப் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்வதன் மூலமும் ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலமும் சருமப் பராமரிப்பு நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. சரும பராமரிப்பின் ஒரு பகுதியாக அமிலங்களைப் பயன்படுத்துவது சருமத்திற்கு பல நன்மைகளை அளிக்கும். ஒரு தனி நபரின் சரும வகை, அவருடைய சருமப் பிரச்சனைகள் ஆகியவற்றைப் பொருத்து இது மாறும்.

    MORE
    GALLERIES

  • 314

    ரெட்டினோல், சாலிசிலிக், ஹைலுரோனிக்.. இந்த அமிலங்கள் சருமத்திற்கு செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

    அமிலங்கள் சருமத்தின் இறந்த செல்களை அகற்றி, சருமத் துளைகளை சரி செய்து, சருமத்தின் அமைப்பை மேம்படுத்தி சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது. அவை ஹைப்பர் பிக்மென்டேஷன்,சருமத்தில் ஏற்படும் கோடுகள் மற்றும் முகப்பரு ஆகியவற்றை சரி செய்யவும் உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 414

    ரெட்டினோல், சாலிசிலிக், ஹைலுரோனிக்.. இந்த அமிலங்கள் சருமத்திற்கு செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

    இருப்பினும், எல்லா அமிலங்களும் ஒரே மாதிரியான தன்மையுடன் உருவாக்கப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மேலும், சில சரும வகைகளுக்கு கடுமையான அமிலங்கள் எரிச்சலை உருவாக்கும். எடுத்துக்காட்டாக, மென்மையான சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் கிளைகோலிக் அமிலம் போன்ற வலுவான அமிலங்களைத் தவிர்க்க வேண்டும் மற்றும் லாக்டிக் அமிலம் அல்லது மாண்டலிக் அமிலம் போன்ற லேசான அமிலத்தினை தேர்வுசெய்யலாம்.

    MORE
    GALLERIES

  • 514

    ரெட்டினோல், சாலிசிலிக், ஹைலுரோனிக்.. இந்த அமிலங்கள் சருமத்திற்கு செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

    உங்கள் அன்றாட வாழ்க்கையில் அமிலங்களை படிப்படியாக அறிமுகப்படுத்துவதும், பயன்படுத்துவதும் அவசியம். ஏனெனில் அதிகப்படியான பயன்பாடு எரிச்சல், வறட்சி மற்றும் சருமத்துக்கு சேதம் விளைவிக்கும். உங்கள் சரும வகைக்கு எந்த அமிலங்கள் பொருத்தமானது மற்றும் அவற்றை எந்த அளவிற்கு பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்க, சருமப் பராமரிப்பு நிபுணர் அல்லது சரும மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

    MORE
    GALLERIES

  • 614

    ரெட்டினோல், சாலிசிலிக், ஹைலுரோனிக்.. இந்த அமிலங்கள் சருமத்திற்கு செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

    உங்கள் சருமப் பராமரிப்பு வழக்கத்தில் அமிலங்களைச் சேர்ப்பது நன்மை பயக்கும், ஆனால் சருமத்தில் எதிர்மறையான விளைவுகளைத் தவிர்க்க கவனமாக பயன்படுத்துவது மிகவும் முக்கியம். பல்வேறு அமிலங்களை முகத்தில் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 714

    ரெட்டினோல், சாலிசிலிக், ஹைலுரோனிக்.. இந்த அமிலங்கள் சருமத்திற்கு செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

    Dr Preeti Savardekar, ஆலோசகர் சரும மருத்துவர்,DVD. DDV, FCPS மற்றும் Dr.ரிக்சன் பெரேரா.MD, FCPS, DDV(CPS),, என்டோட் மருந்துகளுக்கான மருத்துவ ஆலோசகர் ஆகியோர் பல்வேறு சரும வகைகளுக்கான அமிலங்களை பற்றியும் அவற்றின் பயன்பாடுகளைப் பற்றியும் பகிர்ந்து கொண்டவை இங்கே.

    MORE
    GALLERIES

  • 814

    ரெட்டினோல், சாலிசிலிக், ஹைலுரோனிக்.. இந்த அமிலங்கள் சருமத்திற்கு செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

    1.நியாசினமைடு : நியாசினமைடு அமிலத்தை மேற்பூச்சாகப் பயன்படுத்தப்படும்போது, ​​தோலில் இருந்து ஈரப்பதம் குறைவது தடுக்கப்படுகிறது. அதனால் சருமத்தின் ஈரப்பதம் அதிகரிக்கும். இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக, எரிச்சலூட்டும் சருமத்தை ஆற்றுவதற்கு இது ஒரு அருமையான மூலப்பொருள் மற்றும் குறிப்பாக மென்மையான சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்களுக்கு ஏற்றது உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை நியாசினமைடு கொண்டுள்ளதால் தினசரி ஸ்கின் கேர் பொருட்களில் இதை தடையின்றி பயன்படுத்தலாம்.

    MORE
    GALLERIES

  • 914

    ரெட்டினோல், சாலிசிலிக், ஹைலுரோனிக்.. இந்த அமிலங்கள் சருமத்திற்கு செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

    2.ரெட்டினோல் : ரெட்டினோல், வைட்டமின் ஏ வகையைச் சார்ந்தது..இது, பலதரப்பட்ட சருமப் பராமரிப்பு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. பல நன்மைகளையும் வழங்குகிறது. இது செல் உற்பத்தியை அதிகரிக்கிறது, துளைகளை சரி செய்து, சருமத்தை மேம்படுத்துகிறது, இதன் விளைவாக கொலாஜன் உற்பத்தி அதிகரித்து, கோடுகள் மற்றும் சுருக்கங்களைக் குறைத்து, நேர்த்தியான சருமத்தைத் தருகிறது. இருப்பினும், மென்மையான உணர்திறன் வாய்ந்த சரும அல்லது ஒவ்வாமை கொண்ட நபர்களுக்கு , ரெட்டினோல் எரிச்சலை ஏற்படுத்தும். ரெட்டினோல் பயன்படுத்தும் போது, சூரிய வெப்பத்தால் ஏற்படும் ஸ்கின்-சென்சிடிவிட்டியை சருமத்தில் அதிகரிக்கிறது என்பது கவனிக்கத்தக்கது, எனவே ரெட்டினோல் சார்ந்த தயாரிப்புகளைப் பயன்படுத்தும் போது சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதும் சூரிய ஒளி சருமத்தில் படாமல் குறைப்பதும் முக்கியம்.

    MORE
    GALLERIES

  • 1014

    ரெட்டினோல், சாலிசிலிக், ஹைலுரோனிக்.. இந்த அமிலங்கள் சருமத்திற்கு செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

    3.AHA: AHA களின் முதல் செயல்பாடு, உங்கள் சருமத்தின் மேற்புற லேயரை மெதுவாக அகற்றுவதாகும். அதுமட்டுமின்றி, உங்கள் சருமத்திற்கு நன்மை பயக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், முகப்பரு எதிர்ப்பு, மற்றும் கொலாஜன்-அதிகரிக்கும் பண்புகள் போன்ற பல நன்மைகள் இதில் நிறைந்துள்ளன. மேலும், பழைய கொலாஜன் இழைகளை அகற்றுவதன் மூலம் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கும் திறன் AHA களுக்கு உள்ளது. இது உங்கள் சருமத்தின் ஒட்டுமொத்த அமைப்பை மேம்படுத்தும். வறண்ட சருமம் மற்றும் முகப்பருவினால் ஏற்பட்ட தழும்புகள் போன்ற சரும பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு, AHA கள் சிறந்த தேர்வாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 1114

    ரெட்டினோல், சாலிசிலிக், ஹைலுரோனிக்.. இந்த அமிலங்கள் சருமத்திற்கு செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

    4.BHA : BHA என்பது பீட்டா ஹைட்ராக்ஸி அமிலத்தின் சுருக்கம். இது சாலிசைலிக் அமிலம் (Salycylic Acid) என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு மென்மையான மூலப்பொருளாகும். BHA அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மற்ற சுத்தம் செய்யும் பிரஷ் அல்லது கடினமான ஸ்க்ரப்களுடன் ஒப்பிடும்போது இது சருமத்தை மிகவும் மென்மையாக்குகிறது. இது சருமத்தின் மேற்புற லேயரை வெளியேற்றி, இறந்த சரும செல்களை அகற்றி, புதிய மற்றும் ஆரோக்கியமான தோற்றமுடைய சருமத்தை வெளிப்படுத்துகிறது. BHA குறிப்பாக துளைகளுக்குள் எக்ஸ்ஃபோலியேட் செய்வதன் மூலம் நன்மை பயக்கும். உங்களுக்கு எண்ணெய் அல்லது முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமம் இருந்தால், BHA சரும சிதைவுகளை தடுக்கவும் ஆரோக்கியமான தோற்றமுடைய சருமத்தை மேம்படுத்தவும் உதவும்..

    MORE
    GALLERIES

  • 1214

    ரெட்டினோல், சாலிசிலிக், ஹைலுரோனிக்.. இந்த அமிலங்கள் சருமத்திற்கு செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

    5.ஹைலூரோனிக் அமிலம் : ஹைலூரோனிக் அமிலம் அதன் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் பண்புகளுக்காக பலராலும் சிறந்த அமிலமாக கருதப்படுகிறது. இது ஈரப்பதத்தைத் தக்கவைத்து, திசுக்களை மீண்டும் புத்துணர்ச்சி பெற உதவுகிறது. இது சேதமடைந்த சருமத்தை குணப்படுத்தும் செயல்முறையின் இன்றியமையாத பகுதியாகும். மேலும், ஹைலூரோனிக் அமிலம் சருமத்தின் கடினத்தன்மையை மென்மையாக்கவும், நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது, இதன் விளைவாக இளமையான தோற்றம் கிடைக்கிறது. ஹைலூரோனிக் அமிலம் பொதுவாக அனைத்து சரும வகைகளுக்கும் நன்கு பொருந்தும். மேற்பூச்சாக இதை பயன்படுத்தும்போது எதிர்மறையான விளைவுகளை ஏற்பட வாய்ப்பில்லை.

    MORE
    GALLERIES

  • 1314

    ரெட்டினோல், சாலிசிலிக், ஹைலுரோனிக்.. இந்த அமிலங்கள் சருமத்திற்கு செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

    6.செராமைடுகள் :செராமைடுகள், சரும செல்களில் காணப்படும் லிப்பிட் வகையை சார்ந்தது தோலின் வெளிப்புற லேயரின் குறிப்பிடத்தக்க பகுதியை உருவாக்க செராமைடுகள் தேவை. அவை சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் பிற வெளிப்புற காரணிகளிலிருந்து உடலைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. வயதாக ஆக, தோலில் உள்ள செராமைடுகளின் அளவு குறையும். செராமைடுகள் வறட்சி, எரிச்சல் மற்றும் வயதான அறிகுறிகளைத் தடுக்கவும், சருமத்தை ஈரப்பதமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. செராமைடுகளின் மேற்பூச்சு பயன்பாடு பொதுவாக அனைத்து சரும வகைகளுக்கும் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது.

    MORE
    GALLERIES

  • 1414

    ரெட்டினோல், சாலிசிலிக், ஹைலுரோனிக்.. இந்த அமிலங்கள் சருமத்திற்கு செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

    7.சாலிசைலிக் அமிலம் : சாலிசைலிக் அமிலம் லேசானது முதல் மிதமான முகப்பருவுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான இயற்கையான மூலப்பொருள் ஆகும். இந்த மூலப்பொருள் இறந்த செல்களை நீக்கி, அழற்சியைக் குறைப்பதன் மூலம் தோலின் வெளிப்புற லேயரை வெளியேற்ற உதவுகிறது, இது சருமத்தில் ஏற்படும் கருமையை குறைத்து, சரும துளைகளை சரி செய்வதன் மூலம், அதன் எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படுகிறது. இது சரும செல்களின் வெளிப்புற அடுக்கை மென்மையாக்குகிறது. இருப்பினும், சாலிசைலிக் அமிலம் சரும எரிச்சல் மற்றும் வறட்சியை ஏற்படுத்தும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், குறிப்பாக மென்மையான உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள் முடிந்த வரையில் தவிர்க்க வேண்டும்.

    MORE
    GALLERIES