

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சரும வகை உள்ளது. சிலருக்கு சாதாரண சருமம் இருக்கும், மற்றவர்கள் வறண்ட சருமம் , எண்ணெய் சருமம் , முகப்பரு பாதிப்பு சருமம், டிடோன் எனும் கலவையான சருமம் இருக்கலாம்.


தோல் என்பது உங்கள் உடலின் மிக முக்கியமான பகுதியாகும். நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், எந்தவொரு ஸ்கின் கேர் தயாரிப்பை பயன்படுத்துவதற்கு முன்னரும், உங்கள் தோல் எந்த வகை மற்றும் அதற்கு என்ன தேவை என்பதை அறிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது. உங்கள் சருமத்திற்கு சேராதவற்றை தவறாகப் பயன்படுத்தினால் உங்கள் சருமத்தில் நிரந்தர சேதம் ஏற்படக்கூடும். தெளிவான சருமத்தை அடைய தோல் பராமரிப்பு குறிப்புகள் உள்ளன. அதன்படி நீங்கள் ஒருபோதும் உங்கள் பருக்களை தொடவோ, கிள்ளவோ கூடாது. தினமும் இரண்டு முறை உங்கள் முகத்தை கழுவ வேண்டும். எப்போதும் நீரேற்றமாக இருங்கள்.


மேலும் நீங்கள் நல்ல சருமத்தை விரும்பினால் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான சருமத்தை உறுதிப்படுத்த சரியான உணவுகளை உண்ணுவது, பழச்சாறுகள் அருந்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் தெளிவான சருமத்தை அடைய விரும்பினால் பழச்சாறுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பழச்சாறுகள் உங்கள் உடலில் இருந்து அனைத்து நச்சுகளையும் வெளியேற்றி உள்ளே இருந்து ஒளிரச் செய்கிறது.


வெள்ளரிச் சாறு : உங்கள் தோல் பளபளப்பாகவும், பிரகாசமாகவும் இருக்க விரும்பினால் வெள்ளரி சாறை அருந்தலாம். வெள்ளரிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் சருமத்திற்கு நல்லது. இது உங்கள் சருமத்திற்கு இயற்கையான ஈரப்பதத்தை கொடுத்து நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது உள்ளே இருந்து சரும பளபளப்புக்கு வழிவகுக்கிறது.


தக்காளிச்சாறு : தக்காளியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் உங்கள் சருமம் புதியதாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது வயதான அறிகுறிகள் மற்றும் சுருக்கங்களில் இருந்து விடுபட உதவுகிறது. தினமும் ஒரு கிளாஸ் தக்காளி சாறு குடித்து வந்தால் ஒரு வாரத்திற்குள் நல்ல பலன் கிடைக்கும்.


கேரட் சாறு : கேரட்டில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது முகப்பரு மற்றும் பிக்மண்டேஷனை எதிர்த்துப் போராட உதவுகிறது. கேரட்டில் சாற்றில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது உங்கள் குடல்களை சுத்தப்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனைகளையும் நீக்குகிறது. கேரட் உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது, மேலும் ஒழுங்கற்ற சருமத்தையும் சீரமைக்கும்.


கற்றாழை சாறு : கற்றாழை உங்கள் சருமத்தில் அதிசயங்களைச் செய்யலாம். இது சேதமடைந்த சருமத்தை குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. கற்றாழை உங்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை அளிக்கிறது. நீங்கள் சுத்தமான மற்றும் மென்மையான சருமத்தை அடைய விரும்பினால், காற்றாழை ஜூஸ் அருந்தலாம் , கற்றாழையை கழுவிய பின்னர் நேரடியாகவே சருமத்திலும் அப்ளை செய்யலாம்.