வறண்ட சருமம் உள்ளவர்களின் சரும ஆரோக்கியத்திற்கு குளிர்காலம் மிகவும் மோசமான சீசனாக இருக்கிறது. இந்த சீசனில் வீசும் குளிர் காற்று, குளிர் கிளைமேட் மற்றும் குறைந்த ஈரப்பதம் நமது சருமத்தை எளிதில் சேதப்படுத்துகிறது.இந்த சீசனில் சருமம் இயற்கையான எண்ணெய்களை இழப்பதால் சன்ஸ்பாட்ஸ்களும் சருமத்தில் ஏற்படுகின்றன.காலை முதல் இரவு வரையில் ஒரு நடைமுறையையும், இரவு நேரத்தில் வேறொரு சரும பராமரிப்பு நடைமுறையையும் பின்பற்றுவது சிறந்த பலன்களை தரும். உதாரணமாக காலை நேரத்தில் உங்கள் சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீன் தேவைப்படும் அதே நேரம் இரவில் உங்கள் சருமத்தை ஹைட்ரேட்டாக்க உதவும் தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும்.
குளிர் சீசனில் காலை முதல் இரவு வரையில் நீங்கள் பின்பற்ற வேண்டிய சரும பராமரிப்பு நடைமுறை :
காலை வழக்கம்- க்ளென்சிங் : நீங்கள் காலை எழுந்ததும் உங்கள் முகத்தை கழுவ வழக்கமான சோப்பை பயன்படுத்தாமல் ஜென்ட்டிலான க்ளென்சரை பயன்படுத்துங்கள். உங்களது சரும பராமரிப்பை நாளின் துவக்கத்தில் க்ளென்சிங்குடன் தொடங்குவது உடலில் இருந்து வெளியேறும் எண்ணெய், வியர்வை, அழுக்கு மற்றும் நச்சுக்களை முகத்தில் இருந்து திறம்பட அகற்றும்.
மாய்ஸ்ட்ரைஸ் : க்ளென்சிங் தயாரிப்புகளை பயன்படுத்திய பிறகு உங்கள் முகம் ஈரமாக இருக்கும் போது ஊட்டமளிக்கும் மாய்ஸ்சரைசஸ் (nourishing moisturizer) தயாரிப்புகளை பயன்படுத்துங்கள். சருமம் சற்று ஈரப்பதமாக இருக்கும்போது மாய்ஸ்சரைசஸ் பயன்படுத்துவது அது நன்றாக ஊடுருவ உதவி நீண்ட நேரம் ஸ்கின்னை ஹைட்ரேட்டாக வைக்க உதவுகிறது.
சன்ஸ்கிரீன் : கோடை காலத்தில் மட்டுமல்ல ஆண்டின் எந்த சீசனிலும் சன்ஸ்கிரீனை பயன்படுத்துவதை உறுதி செய்வது சிறந்த சருமத்தைபெற உதவுகிறது. டேனிங்கிற்கு எதிராக மட்டுமல்ல சூரியனில் இருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிடமிருந்து நம் சருமத்தைப் பாதுகாக்கவும் சன்ஸ்கிரீன் உதவுகிறது. நாள் முழுவதும் சீரான இடைவெளியில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது சருமத்தை நன்கு பாதுகாக்க உதவும்.
ஃபேஷியல் ஆயில்ஸ் : வறண்ட குளிர்கால காற்று சருமத்தின் முக்கிய ஈரப்பதத்தை உறிஞ்சி, நீரிழப்புக்கு வழிவகுக்கிறது. எனவே குளிர் சீசனில் தினமும் இரவு உங்கள் சருமத்திற்கு ஃபேஷியல் ஆயில் கொண்டு மசாஜ் செய்வது சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைத்து, ஈரப்பத இழப்பைத் தடுக்க உதவுகிறது. மேலும் சருமத்தை ஃபிரெஷ்ஷாக வைக்கிறது. ஹைட்ரேடிங் & மாய்ஸ்ட்ரைஸிங் ஃபேஷியல் ஆயில்களை பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெய், ஆர்கன் எண்ணெய் அல்லது ரோஸ்ஷிப் எண்ணெயையும் பயன்படுத்தலாம். மாலை நேரத்தில் இந்த வழக்கத்தை பின்பற்றி இரவு தூங்க செல்லும் முன் ஃபேஸ் வாஷ் செய்யலாம்.