அழகான மற்றும் பளபளப்பான சருமத்தை விரும்பாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். தினமும் 8 மணி நேரம் நிம்மதியான தூக்கம் மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை ஹைட்ரேட்டாக வைத்து கொள்வது உள்ளிட்ட பல டிப்ஸ்கள் சருமம் பளபளக்க இயற்கையான முறையில் உதவுகின்றன.என்றாலும் கூடுதல் பளபளப்பை அளிப்பதில்பிரத்தியேகமாக நாம் பயன்படுத்தும் அழகுசாதன பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நீங்கள் சமீபத்திய மேக்கப் ட்ரெண்டுகளைத் தொடர்ந்து பின்பற்றி பளபளப்பான மேக்-அப் டிரெண்டை மேம்படுத்த நீங்கள் விரும்பினால், உங்கள் அன்றாட வழக்கத்தை விட அதில் இருக்கும் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
இலுமினேட்டிங் மாய்ஸ் : சரைசருடன் நாளை துவக்குங்கள்..
குறைபாடற்ற மேக்கப் என்பது உண்மையிலேயே நன்கு ஹைட்ரேட்டான பேஸ் (well-hydrated base) என்பதில் இருந்து தான் துவங்குகிறது. தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்காமலேயே சருமத்தை ஜொலிக்க வைக்க இது சிறந்த ஹேக் ஆகும். ஏனென்றால் இலுமினேட்டிங் க்ரீம்ஸ் அல்லது இலுமினேட்டர்கள் மாய்ஸ்சரைசரைப் போன்ற நிலைத்தன்மையைக் கொண்டிருப்பதோடு,சருமத்திற்கு இயற்கை பளபளப்பைக் கொடுக்கும்.
பளபளப்பான ஐ ஷேடோ : கலர் ஐலைனர்கள் மற்றும் மெட்டாலிக் ஐ மேக்கப் தவிர க்ளாசி ஐ ஷேடோக்களும் (glossy eyeshadow) சமீபத்தில் பிரபலமாகி வருகின்றன. மாடல்கள் மற்றும் பிரபலங்கள் பளபளப்பான ஐ ஷேடோக்களை பயன்படுத்தி லுக்காக தெரிய விரும்புகிறார்கள். கண் இமைகளில் சிறிதளவு வாஸ்லைன் அல்லது உங்களுக்குப் பிடித்த ட்ரான்ஸ்பரன்ட் லிப்கிளாஸ் மற்றும் voila-வை தேய்க்கலாம்.
இதனிடையே Simply Nam-ன் நிறுவனர் நம்ரதா சோனி கூறுகையில், ஒரு கிளாசி மேக்கப் லுக்கை உருவாக்குவதில் முக்கியபடி, உங்கள் தோல் வகைக்கு ஏற்ற தயாரிப்புகளை சரியாக தேர்வு செய்து பயன்படுத்துவது என்கிறார். வறண்ட சருமம் உள்ளோர் ஹெவி மாய்ஸ்சரைர், சென்சிட்டிவ் சருமமா இருந்தால் ஜெல் அல்லது சீரம் அடிப்படையிலான மாய்ஸ்சரைசரை பயணப்படுத்த கூறுகிறார். பின் dewy ஃபினிஷ் கொண்ட பிரைமர் பயன்படுத்துங்கள். பின் உங்கள் ஃபவுன்டேஷனில் சிறிது திரவம் அல்லது பவுடர் ஹைலைட்டரைக் கலந்து, ஸ்பான்ஜ், பிரஷ் அல்லது விரல் நுனிகள் மூலம் உங்கள் தோலில் பஃப் செய்யவும். தொடர்ந்து கண்களுக்குக் கீழே, வாயைச் சுற்றி, மூக்கு பகுதிகள், நெற் போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் பவுடரை தடவலாம் என்று டிப்ஸ் கொடுத்துள்ளார்.