

சமந்தாவின் பேரழகு ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களையும் பொறாமை பட வைக்கும் பொலிவான சருமம். மென்மையான ஷைனிங் முகத்தோற்றம் எப்படி அவருக்கு மட்டும்..? என யோசிக்கும் உங்களுக்கு பதில் இதோ..!


நேர்மறை சிந்தனைகள் : ஒரு முன்னனி இணையதளத்திற்கு அளித்த பேட்டியின் போது உங்களின் பொலிவான சருமத்திற்கு என்ன காரணம் என்று கேட்ட போது பாசிடிவிட்டி எனக் கூறினார். கெட்ட சிந்தனைகளை நீக்கி, கோபம் எதுவுமே இல்லாமல் ஃபிரீ மைண்டுடன் இருந்தாலே அதன் வெளிப்பாடு முகத்தில் தெரியும் என்று கூறினார்.


சன் ஸ்கிரீன் : எப்போது , எங்கே வெளியே சென்றாலும் சன் ஸ்கிரீன் போடாமல் போக மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.


மேக்அப் தவிர்த்தல் : கூடுமானவரை தேவையற்ற இடத்திற்கு, வீட்டில் இருக்கும் போது , சாதாரண நிகழ்ச்சி என செல்லும்போதெல்லாம் மேம் அப்பை தவிர்த்து இயற்கை அழகுடன் செல்வதையே அவர் விரும்புகிறார். அதற்கு அவருடைய மேக்அப்பே இல்லாத இன்ஸ்டாகிராம் ஃபோட்டோக்களே சாட்சி.


இரவு அழகுப் பராமரிப்பு : இரவு தூங்கும் போது நைட் கிரீம் அப்ளை செய்வது அவருடைய வழக்கம். ஏனெனில் அதுதான் உங்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து ஆரோக்கியமாக வைக்க உதவும் என்று கூறியுள்ளார்.