நடிகை ராஷ்மிகா தனது தொழில் வாழ்க்கையில் பல கேரக்டர்களை ஏற்று சூப்பராக நடிப்பதற்காக மட்டுமல்ல ஃபேஷன் மற்றும் அழகிற்காகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். ராஷ்மிகாவை போன்ற பளபளப்பான சருமம் மற்றும் அழகான கூந்தல் உங்களுக்கு வேண்டுமா..? பளபளப்பான சருமம் மற்றும் அழகான கூந்தலுக்கான ராஷ்மிகாவின் ரகசியம் என்ன என்பதை தெரிந்து கொள்ள மேலே படிக்கவும்.
சமீபத்தில் Pinkvilla என்ற வெப்சைட்டிற்கு அளித்த பேட்டியின் போது ராஷ்மிகா மந்தனா தனது அழகு ரகசியங்களையும், கேம் சேஞ்சர் மேக்கப் ஹேக்ஸ்களையும் பற்றி வெளிப்படுத்தினார். மேக்-அப் போடுவதற்கு முன்பான தனது ஸ்கின் கேர் ரொட்டின் பற்றி பேசுகையில், சன்ஸ்கிரீன் தான் என்னுடைய சிறந்த சாய்ஸ். குறிப்பாக பயணம் மற்றும் அவுட்டோர் ஷூட்டிங்கின் போது தரமான சன்ஸ்கிரீனை தாராளமாக பயன்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.
மேலும் பேசிய ராஷ்மிகா, ஒவ்வொரு இரவும் தான் பின்பற்றும் தோல் பராமரிப்பு வழக்கத்தை விவரித்தார். மேலும் ஒவ்வொரு இரவும் 2 முறை க்ளென்சிங் செய்கிறேன் என்று கூறினார். ஒரு நடிகையாக தினசரி ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான மிக முக்கியமான படி ஹைட்ரேட்டாக இருப்பது. இதற்காக தினமும் நிறைய தண்ணீர் மற்றும் ஜூஸ் குடித்து தன்னை நீரேற்றமாக வைத்திருப்பதாக வெளிப்படுத்தினார். அழகான கூந்தல் மற்றும் பளபளப்பான சருமத்திற்கு நிறைய கீரைகள் மற்றும் காய்கறிகள் கொண்ட சத்தான டயட்டை பின்பற்றுவதாகவும் கூறி உள்ளார்.
உங்களுக்கு கேம் சேஞ்சராக மாறிய ஒரு மேக்கப் ஹேக் இருக்கிறதா என்ற கேள்விக்கு ஆம் என்று பதிலளித்த ராஷ்மிகா அதை பற்றி விளக்கினார். ஃபவுன்டேஷன் மற்றும் கன்சீலர் உள்ளிட்டவற்றின் கலர் டெஸ்ட்களை உங்கள் முகம் அல்லது கழுத்தில் செய்ய வேண்டும் மாறாக பல செய்வது போல உங்கள் கை அல்லது ஆர்ம்-ல் செய்ய கூடாது என்ற மேக்கப் ஹேக்கை நான் கற்று கொண்டேன். இதற்கு காரணம் உங்கள் கை உங்கள் முகத்தில் இருந்து வேறுபட்ட நிறமாக இருக்கலாம், எனவே துல்லியமான கலர் மேட்சிங்கை பெற ஒரே வழி இதுதான் என்றார். K-Pop பாடல்களை கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் K-Pop-ன் இசையமைப்புகளை விரும்புகிறேன். மேலும் அவை எனது எல்லா மனநிலைகளுக்கும் ஏற்ற பிளேலிஸ்ட்டாக இருக்கிறது.