அப்படியொரு நபர் தான் பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங். திரையில் தன்னுடைய தோற்றத்தை பிரம்மாண்டமாக காட்ட வேண்டும் என்பதைக் காட்டிலும், உண்மையாகவே தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நிறைய முயற்சிகளை செய்து வருகிறார் இவர். இவருடைய பழக்க, வழக்கங்களை தெரிந்து கொண்டால் நாமும் அதை முயற்சி செய்து பார்க்கலாம்.
தீவிரமான பயிற்சிகள் : மிகுந்த தீவிரத்தன்மை கொண்ட உடற்பயிற்சிகளில் ரன்வீர் சிங் கவனம் செலுத்துகிறார். புஷ் அப், பர்பீஸ், ஸ்குவாட்ஸ், டெட்லிஃப் போன்ற பயிற்சிகளை செய்வதுடன், உடல் இயக்கத்திற்கு தேவையான பயிற்சிகளையும் செய்து முடிக்கிறார். இது அவரது தசைகளை பலமானதாகவும், வலுவானதாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
மதுப்பழக்கம் கிடையாது : உடல்நலன் குறித்து அக்கறை கொண்டுள்ள ரண்வீர் சிங் மதுவுக்கு நோ சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக மது அருந்தினால் அது நோய் எதிர்ப்பு சக்தி கட்டமைப்பை பாதிக்கும் என்று நம்புகிறார். ஆக, நீங்களும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்பினால் படிப்படியாக மதுவை கைவிடுவது நல்லது.
கார்டியோ பயிற்சிகள் : தினசரி காலைப் பொழுதில் 40 முதல் 45 நிமிடங்களுக்கு கார்டியோ பயிற்சிகளை செய்வது ரண்வீரின் பழக்கமாக உள்ளது. உடல் இயக்கப் பயிற்சிகளுக்கு என்று சுமார் 25 நிமிடங்களை ஒதுக்குகிறார். கார்டியோ பயிற்சிகளை செய்தால் நம் உடலில் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, வலுவான தோற்றம் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
3 மணி நேரத்திற்கு ஒருமுறை உணவு : ஆம், வயிறு முட்ட ஒரே சமயத்தில் சாப்பிடுவதைக் காட்டிலும், அதே உணவை கொஞ்சம், கொஞ்சமாக பிரித்து சாப்பிடுவதன் மூலமாக உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்குமாம். அந்த வகையில் தினசரி உணவை 3 மணி நேரத்திற்கு ஒருமுறை கொஞ்சமாக எடுத்துக் கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார் ரண்வீர் சிங்.
சர்க்கரை மற்றும் மாவுச்சத்து : பத்மாவதி திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாக 6 மாதங்கள் வரையிலும் சர்க்கரையை முற்றிலுமாக நிறுத்திவிட்டாராம் ரண்வீர் சிங். குறிப்பாக உடல் பருமனுக்கு வழிவகை செய்யும் மாவுச்சத்து உணவுகளையும் குறைத்துக் கொள்கிறார். ரண்வீரின் உடல் தேஜஸுடன் காட்சியளிக்க இதுவும் ஒரு காரணம்.