ஒரு சிலருக்கு வயதே ஆகாத அளவுக்கு என்றென்றும் இளமையாக, அழகாக, பிரமிப்பாக காட்சியளிப்பார்கள். பிரபலங்களின், நடிகைகளின் அழகு ரகசியம் பற்றி தெரிந்து கொள்ள எந்த அளவுக்கு விரும்புகிறார்களோ, அதே அளவுக்கு அரசிகள், இளவரசிகள் வாழ்க்கை முறை, அவர்கள் அழகின் ரகசியம் என்ன என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகம். பண்டைய காலத்து அரசிகள் பற்றிய குறிப்புகள் தெரிய வரும் போது வியப்பாக இருக்கும்.
மறைந்த முன்னாள் இளவரசி டயானாவுக்கு அடுத்த படியாக, பெரிதாக கவனம் ஈர்த்தது கேட் மிடில்டன். இங்கிலாந்து அரசராக பதவியேற்க இருக்கும் மன்னர் சார்லஸ் மற்றும் டயானாவின் மூத்த மகன் வில்லியம், மனைவியான கேட் மிடில்டன் பற்றிய செய்திக்கு குறைவே இல்லை. கண்களுக்கு உறுத்தாத மேக்கப், அழகான நேர்த்தியான ஆடைத் தேர்வுகள், டயானா போலவே விதவிதமான தொப்பிகள் என்று கேட் மிடில்டன் எப்போதும் கண்களுக்கு விருந்தாக காட்சியளிப்பார். கேட் மிடில்டன் அழகின் ரகசியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
எக்ஸ்ஃபோலியேஷன் தவறாமல் செய்ய வேண்டும் : எவ்வளவு மேக்கப் போட்டுக் கொண்டாலும், சருமம் இயற்கையாக பொலிவாக இருக்க வேண்டும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் பிராசஸ் பெயர் தான் எக்ஸ்ஃபோலியேஷன். இறந்த செல்கள் நீங்கும் போது, சருமத்தில் ஆரோக்கியமான செல்கள் வளர்ந்து, ரத்த ஓட்டம் அதிகரித்து இயற்கையான பொலிவைத் தரும்.