டிரெண்டியாகவும் , இளநரையை மறைக்கவும் பெண்கள் பயன்படுத்தும் நிரந்தர ஹேர் கலரிங் செய்து கொள்வது இன்று சாதாரண விஷயமாகிவிட்டது. ஆனால் அப்படி நிரந்தர ஹேர் கலரிங் செய்வது பெண்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் என சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வு BMJ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.