சம்மருக்கு வீட்டில் இருந்தாலும் அல்லது வெளியே சென்றாலும் சருமத்தை பராமரிப்பது அவசியம். அதுவும் காலையின் முதல் வேலையாக அதை செய்துவிட வேண்டும் என்கிறார் சுஜிதா. உடலை பராமரிக்கவும், குளுர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் எப்படி உணவுகளில் அக்கறை செலுத்துகிறோமோ அதேபோல் சருமத்தை பராமரிப்பதும் அவசியம் என்கிறார். அப்படி காலை எழுந்ததும் செய்ய வேண்டியவை என்னென்ன என்பதை பட்டியலிடுகிறார் சுஜிதா. காலை எழுந்ததும் முகத்தை கிளென்சர் கொண்டு கழுவ வேண்டும். பின் முகத்தை ஈரமின்றி நன்கு துடைத்துவிட்டு மாய்சரைசர் அப்ளை செய்ய வேண்டும். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள உதவும். அடுத்தாக வீட்டில் இருந்தாலும் சன் ஸ்கிரீன் அவசியம் என்கிறார். அதுவும் spf30 இருக்கும் எந்த பிராண்டாக இருந்தாலும் வாங்கி பயன்படுத்துவது நல்லது என்கிறார். பின் உதட்டிற்கு லிப் பாம் தடவ வேண்டும். இவற்றை தினசரி காலை மற்றும் இரவு தவறாமல் பின்பற்றுவதுதான் என் முதல் கடமை என்கிறார் சுஜிதா. பின் ஆரோக்கியமான கோடைக்கால உணவுகளை சாப்பிடுவதும் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க முடியும் என்கிறார். பின் வாரம் இரு முறை அல்லது வெளியே சென்று வந்தால் குளுமையான ஃபேஸ் பேக் முகத்திற்கு இதம் தரும் என்கிறார். அதற்கு அவர் செய்யும் ஃபேஸ் பேக்குகளையும் பகிர்ந்துள்ளார். ரோஜாபூ ஃபேஸ் பேக் : ரோஜா இதழ்கள் சில எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பச்சை பால் ஊற்றி மிக்ஸியில் மைய அரைத்து அதை முகம் முழுவதும் அப்ளை செய்யலாம் என்கிறார். நெய் ஊற்றி தயிர் சாதம் தாளிப்பதுதான் சுஜா வருணியின் ஸ்பெஷல் : சம்மருக்கு இவங்களோட ஃபேவரட் டிஷ் இதுதானாம்..! உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக் : உருளைக்கிழங்கு , தக்காளி, வெள்ளரி இவை மூன்றையும் மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள். பின் அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளுங்கள். காலை குளிக்கும் முன் அல்லது வேலைக்கு சென்று வந்த பின் இந்த பேக்கை அப்ளை செய்தால் வெயில் கருமை நீங்கும். மசாஜ் : கற்றாழை சதையை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்வது நல்லது. தேங்காய் எண்ணெய், உப்பு இல்லாத வெண்ணெய் கொண்டும் முகத்திற்கு மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் பளபளப்பான சருமத்தை பெறுவீர்கள் என்கிறார் சுஜிதா.