உடல் நலத்தில் எந்தளவிற்கு அக்கறை எடுத்துக்கொள்கிறோமோ? அந்தளவிற்கு சரும பராமரிப்பிலும் அக்கறையுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பான ஒன்றுதான். அப்படி இந்த புத்தாண்டு தீர்மானத்தில் நீங்கள் சரும பராமரிப்பைப் பாதுகாக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தால், இந்த முறைகளை வழக்கமாக பின்பற்றிக்கொள்ளுங்கள் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
ஆரோக்கிய மற்றும் சரிவிகித உணவுகள் : முகத்தைப் பராமரிப்பதற்குப் பேஸ் வாஷ் மட்டும் போதாது. ஆரோக்கியமான உணவுகளையும் நாம் அன்றாட வாழ்க்கையில் உட்கொள்வது அவசியம். புரதம் மற்றும் நார்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள் போன்றவை சாப்பிட வேண்டும். தேவையில்லாத நொறுக்குத் தீனிகள், எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதைத் தவிர்த்தாலே போதும் முகத்தில் முகப்பரு பிரச்சனைகள் வராது. ஒருவேளை உங்களுக்கு ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் கொஞ்சமாக சாப்பிடவும். இது உங்களது உடலுக்கு ஆரோக்கியத்தோடு முகத்தையும் பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.
சன்ஸ்கிரீன் பயன்படுத்துதல் : பொதுவாக சூரிய ஒளியில் வெளியில் செல்லும்போது அதிலிருந்து வரக்கூடிய புற ஊதா கதிர்கள் சருமத்திற்குத் தீங்கு விளைவிப்பதோடு முகத்தின் அழகைக் கெடுத்துவிடுகிறது. எனவே நீங்கள் எப்போது வெளியில் சென்றாலும் சன்ஸ்கீரினைப் பயன்படுத்துங்கள். மிருதுவான சருமத்தைப் பெறுவதற்கு உதவியாக இருக்கும். நீங்கள் வெளியில் செல்லும்போது, மேக் அப் செய்ய வேண்டியிருந்தால், முதலில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தி பின்னர் பிற அழகுசாதனப் பொருள்களைப் பயன்படுத்துங்கள்.
தோல் பராமரிப்பில் அக்கறை : நீங்கள் வெளியில் சென்று வந்தாலே உங்களது முகத்தில் தூசி மற்றும் அழுக்குகள் சேர்ந்துவிடும். எனவே வெளியில் சென்று வந்தவுடன், முகத்தை நன்றாக கழுவ வேண்டும். பின்னர் சருமத்தின் வகைக்கு ஏற்றவாறு மென்மையான க்ளென்சர் மூலம் உங்களது முகத்தைச் சுத்தம் செய்து, இயற்கையான ஊட்டமளிக்கும் பொருள்களைக் கொண்ட மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.
இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்துதல் : உங்களது முகத்திற்கு வெள்ளரி, பழுத்த பப்பாளி, பழுத்த வாழைப்பழம், புதிய கற்றாழை ஜெல், ரோஸ் வாட்டர் போன்ற பல்வேறு பொருள்களைக் கொண்டு முகத்தில் மசாஜ் செய்து பேஸ் வாஷ் செய்யவும். மேலும் சருமத்தில் உள்ள அகற்றுவதற்கு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக ஸ்கரப்பிங் செய்வும். இதோடு கால் நகம் மற்றும் கை நகங்களைப் பராமரிப்பதற்கு மெனிக்யூர், பெடிக்யூர் போன்றவற்றையும் செய்து வந்தால் போதும். எப்போதும் ஆரோக்கியமான உடல் நலத்துடன் முக பளபளப்பையும் பெற முடியும். இதுபோன்ற விஷயங்களை நீங்கள் செய்வதற்கு முன்னதாக அதிக கெமிக்கல் கொண்ட பொருள்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக இயற்கையான பொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.