தலைமுடி பராமரிப்பில் பலர் சந்தித்து வரும் பிரச்சனைகளில் வறட்சி மற்றும் பொடுகு தொல்லை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது. மிக மோசமான விஷயம் என்னவென்றால், பொடுகு உங்கள் உச்சந்தலையை மட்டும் பாதிப்பதில்லை. முகத்திலும், சருமத்திலும் பொடுகு சில சேதங்களை ஏற்படுத்துகிறது. பொதுவாக பொடுகுக்கு வறட்சியே முக்கிய காரணம் என்று நீங்கள் நினைக்கலாம். இருப்பினும், உண்மையில், பொடுகுக்கு குறுகிய ஆயுளைக் கொண்ட தோல் செல்கள் காரணமாக தான் காரணமாக அமைகின்றன. அவை மிக வேகமாக வளர்ந்து இறந்து விடுகின்றன.
மலாசீசியா எனப்படும் பூஞ்சை பொடுகுக்கு காரணமாகிறது. அதிலும் குளிர்காலம் இந்த பூஞ்சை தொற்று வளர மிகவும் பொருத்தமான காலம் என்று கூறப்படுகிறது. இதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், நீங்கள் எத்தனை முறை முயற்சித்தாலும் மீண்டும் இந்த பூஞ்சை வளரும். இதனால் உங்களுக்கு பொடுகு தொல்லை போகவே போகாது. பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபடுவதற்கான ஒரு சிறந்த வழி, தினமும் ஷாம்பு கொண்டு தலையை அலசுவது தான். இது குறுகிய ஆயுளைக் கொண்ட செல்களை வளரவிடாமல் தடுக்கிறது. இதனால் பொடுகுத் தொல்லையும் தடுக்கப்படுகிறது. ஒருவேளை இதனை நீங்கள் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் பொடுகுத் தொல்லையின் விளைவு முடி உதிர்தலை ஏற்படுத்தும். மேலும், இதற்கு இயற்கை முறையில் தீர்வு இருக்கிறதா என யோசித்தால், கட்டாயம் இருக்கிறது.
பொடுகுக்கு வேம்பு பயன்படுத்துவதை விட மிகசிறந்த தீர்வு வேறெதுவுமில்லை. வேப்ப இலையில் உள்ள பண்புகள் பல தோல் மற்றும் முடி பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. இதில் இரத்தத்தை சுத்திகரிக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு கூறுகள் உள்ளன. வேம்பு ஒரு பூஞ்சை காளான் மற்றும் ஆன்டிவைரல் என அழைக்கப்படுகிறது. எனவே பொடுகுத் தொல்லையைப் போக்கவும், அழகான, பளபளப்பான கூந்தலைப் பெறவும் வேம்புவை எந்தெந்த வழிகளில் பயன்படுத்தலாம் என்பதை பின்வருமாறு காணலாம்.
1. வேப்ப இலைகளை சாப்பிடுதல்: இதனை செய்வது கொஞ்சம் கடினம் தான். ஆனால் பல்வேறு உடல்நலம் மற்றும் அழகு நிபுணர்களின் கூற்றுப்படி, பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட எளிதான வழி, தினமும் காலையில் வேப்ப இலைகளை மென்று சாப்பிடுவதுதான் எனக் கூறியுள்ளனர். கசப்புச் சுவை குறைய, இலையை தேனுடன் கலந்து கொதிக்க வைத்து கஷாயம் செய்து, வடிகட்டிய நீரை அருந்தலாம்.
2. வேப்ப எண்ணெய்: தேங்காய் எண்ணெயில் சில வேப்ப இலைகளைச் சேர்த்து கொதிக்க வைத்து, இறுதியாக அதில் சில துளிகள் எலுமிச்சையைச் சேர்த்து வடிக்கட்டி கொள்ளுங்கள். இந்த எண்ணெயை தலையில் தடவிய பிறகு சூரிய ஒளியில் செல்ல வேண்டாம். ஏனெனில் உங்கள் தலைமுடியில் உள்ள எலுமிச்சை சாறு சூரிய ஒளியில் பட்டால் சில பக்க விளைவுகள் ஏற்படலாம். இந்த எண்ணெயை உங்கள் உச்சந்தலையில் மெதுவாக தேய்த்து, இரவு முழுவதும் விட்டுவிட்டு, காலையில் தலையை அலசுவதே சிறந்த வழி.
3. வேப்பிலை மற்றும் தயிர்: வேம்பு மற்றும் தயிர் பொடுகைக் கட்டுப்படுத்த சிறந்த வழிகளில் ஒன்று. பொடுகுக்கான சிகிச்சையாக கருதப்படும் தயிர், உங்கள் முடியை மென்மையாக்கும் மற்றும் பலப்படுத்தும். வேப்ப இலைகளை பேஸ்ட்டாக அரைத்து, அதை தயிரில் சேர்த்து, உங்கள் உச்சந்தலையில் தடவவும். அதை 15-20 நிமிடங்கள் விட்டு, பின்னர் தலையை அலசுங்கள். தயிரின் குளிர்ச்சியான விளைவுடன் இணைந்து வேப்பிலையின் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பொடுகை எதிர்த்துப் போராடுவதில் அதிசயங்களைச் செய்கின்றன.
4. வேப்பிலை மாஸ்க்: வேப்பிலை ஹேர் மாஸ்க் பொடுகுக்கு எளிதான தீர்வாகும். சில வேப்ப இலைகளை எடுத்து மிக்ஸியில் அரைத்து அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்க்க வேண்டும். இந்த கெட்டியான பேஸ்டை ஒரு ஹேர் மாஸ்க் போல உச்சந்தலை முழுவதும் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். அது நன்கு காய்ந்ததும் தலையை அலசுங்கள்.
5. வேப்பிலை ஹேர் கண்டிஷனர்: வேப்பிலையின் பன்முகத்தன்மை என்னவென்றால், நீங்கள் அதை ஹேர் வாஷ் செய்வதற்கு முன்னரும் பின்னரும் கூட பயன்படுத்தலாம். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வேம்பு கண்டிஷனரை தயாரிக்க, சில வேப்ப இலைகளை எடுத்து கொதிக்க வைத்து, ஆறவிடவும். உங்கள் தலைமுடியை ஷாம்பு செய்த பிறகு, இந்த வேப்பிலை கலவையைக் கொண்டு தலைமுடியைக் கழுவுங்கள்.
6. வேப்பிலை ஷாம்பு: இந்த ஷாம்பு அனைத்து பொடுகு பிரச்சனைகளுக்கும் எளிதான தீர்வு. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அருகிலுள்ள கடையில் இருந்து வேம்பு சார்ந்த ஷாம்பூவைப் பெறுங்கள். அதை வைத்து தலைமுடியை வாரத்திற்கு 2-3 முறை அலசுங்கள். ஏனெனில் பொடுகை போக்க தேவையான அனைத்து குணப்படுத்தும் பண்புகளும் இதில் உள்ளன.