முகத்தில் எப்போதும் சட்டென கவனிக்கக் கூடிய விஷயம் புருவங்கள். சிலருக்கு புருவங்களில் முடிகள் குறைவாக இருக்கலாம். இல்லையேல் ஷேப் சரியில்லாமல் போகலாம். அவர்களுக்கெல்லாம் இந்த ஐபுரோ ஷேப் கிட்டுகள்தான் உதவுகின்றன. குறிப்பாக சினிமா நடிகைகள் பலர் இந்த புருவ ஒப்பனையில்தான் முக வித்யாசங்களைக் காட்டி வருகின்றனர். குறிப்பாக அழகுக் குயின் நயன்தாரா தனது முக அமைப்பை இந்த புருவங்கள் மூலமே வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்.
சாஃப்ட் ஆங்கில் ஷேப் அல்லது ஆர்ச்ட் (arched) : ராஜா ராணி படத்தில் நயன்தாரா மூன்று வகைகளில் தன் புருவத்தை வித்தியாசப்படுத்தியிருப்பார். குறிப்பாக புடவையில் தோன்றும் காட்சிகளில் அமைதியான மற்றும் பொறுப்பான பெண் தோற்றத்தை ஏற்படுத்த புருவங்களை சாஃப்ட் ஆங்கல் ஷேப்பை அதிகமாக பயன்படுத்துவார்ர். இது கூடுதலாக ஸ்டைலிஷான தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது.
ரவுண்டட் திக் ஷேப் : கம்பீர முக அமைப்பை அளிக்கக் கூடிய தோற்றத்திற்கு புருவங்களை அடர்த்தியாக பட்டைத் தீட்டுகிறார். உதாரணமாக இருமுகன், காஷ்மோரா, புதிய நியமம் என அல்டிமேட் போல்டான தோற்றத்திற்கு ரவுண்டட் ஷேப்பில் அதிக பட்டை தீட்டி டெயில் என சொல்லப்படும், புருவங்களின் முனைப் பகுதியில் மட்டும் மெல்லியதாக வரைகிறார்.