முகத்தில் சிறிய முகப்பரு வந்தாலே அதை நினைத்து வருந்துபவர்கள் தான் அதிகம். அந்த வகையில் கரும்புள்ளிகள் வருவது எல்லாம் மிக மோசமானதாக பலருக்கும் இருக்கும். நமது சருமத்தில் மெலனின் அதிகம் சுரப்பதால் தான் கரும்புள்ளிகள் பெரும்பாலும் உருவாகுகிறது. இதனால், முகத்தில் ஒரு குறிப்பிட்ட இடம் முழுக்க மிகவும் வித்தியாசமாக மாறி விடும். இது பலருக்கும் அசௌகரியத்தை தருவதாக இருக்கும். கரும்புள்ளிகள் முக அழகை கெடுக்கும் முக்கிய காரணியாக உள்ளது. இந்த பதிவில் கரும்புள்ளிகளை நீக்க கூடிய சில இயற்கை எண்ணெய்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
ரோஸ்ஹிப் ஆயில் : சரும பிரச்சனைகளை குணப்படுத்துவதில் ரோஸ் ஆயில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ரோஸ்ஹிப் விதையானது தோல் செல்களை மீளுருவாக்கம் செய்வதை விரைவுபடுத்த உதவுகிறது. இதன் விளைவாக உங்கள் முகம் மிகவும் பொலிவு பெறும். மேலும் முகம் பிரகாசமாக இருக்கும். கொழுப்பு அமிலங்களுடன் சருமத்தை ஆழமாக ஹைட்ரேட் செய்யவும், சருமத்தின் கரும்புள்ளிகளை குறைக்கவும் இது உதவுகிறது.
ஃப்ராங்கன்ஸ்டைன் ஆயில் : இந்த எண்ணெயின் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் முகப்பருவுக்கு சிறந்த நிவாரணம் தரும். மேலும் முகத்தில் உள்ள பெரிய துளைகளைக் குறைப்பதற்கும், சருமத்தை இறுக செய்வதற்கும் உதவும். இது சருமத்தின் பொலிவை மீட்டெடுக்கவும் செய்கிறது. இந்த எண்ணெயின் ஆண்டிசெப்டிக் தன்மை சரும பாதிப்புகளை குணப்படுத்த கூடியவை. வெயிலின் தாக்கத்தால் உங்கள் சருமம் பொலிவு இழந்தும் மற்றும் கருமையாகவும் இருந்தால் அதை பிரகாசமாக இது வழி செய்கிறது.

ஜெரேனியம் ஆயில் : இது இயற்கையான முறையில் ஆண்ட்டி ஆக்சிடென்ட்ஸ் பண்புகளை கொண்டுள்ளது. பாதிக்கபட்ட சருமத்தை குணப்படுத்தவும், செல்களை மீளுருவாக்கம் செய்யவும் உதவுகிறது. ஜெரேனியம் ஆயில் சிறந்த முறையில் சருமத்தை டோனிங் செய்ய வழி செய்கிறது. மேலும் இது சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைக்கவும் உதவுகிறது. கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் இந்த எண்ணெயை தடவி வந்தால் விரைவில் நல்ல பலனை பெறலாம்.