சரும பராமரிப்பு என்று வரும் பொழுது அதற்கு ஏகப்பட்ட சிகிச்சைகள் இருக்கின்றன. பொதுவாக சரும பராமரிப்பு என்பதைத் தவிர்த்து, சருமத்திலிருக்கும் பருக்கள், அதனால் ஏற்பட்ட தழும்புகள், திறந்திருக்கும் சருமத்துளைகள், சருமத்தில் இருக்கும் திட்டுக்கள், வயதான அறிகுறி, வறட்சியான சருமம், மங்கு. உள்ளிட்டவற்றுக்கு பல வகையான சிகிச்சைகள் இருக்கின்றன. இதில் மைக்ரோநீடிலிங் என்ற சரும பராமரிப்பு சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆக்னே ஸ்கார்ஸ் என்று கூறப்படும் தழும்புகளை இந்த மைக்ரோ நீடிலிங் மூலம் சரி செய்ய முடியுமா என்பதை இங்கே பார்க்கலாம்.
மைக்ரோநீடிலிங் என்பது மிக மிக மெல்லிய கூரான ஊசி போன்ற முனையைக் கொண்ட ஒரு சாதனமாகும். இந்த சாதனத்தின் நுனிப்பகுதி சுத்திகரிக்கப்பட்டு மேற்கூறப்பட்ட அனைத்து வகையான சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. பொதுவாக மைக்ரோ மைக்ரோநீடிலிங் என்பது தனிப்பட்ட சிகிச்சையாக பயன்படுத்தப்படாமல், இதனுடன் ரேடியோ ஃப்ரீகுவன்ஸி, பி ஆர் பி அல்லது மீசோதெரப்பி உள்ளிட்ட சிகிச்சைகளுடன் சேர்த்து செய்யப்படுகிறது. சருமத்தின் மேற்பரப்பில் அப்ளை செய்யப்படும் ஊட்டச்சத்துக்கள் அடுத்தடுத்த லேயர்களுகுச் செல்வதற்காக, சிறிய துளைகளை மைக்ரோநீடிலிங் மூலம் செய்யலாம்.
பொதுவாகவே சருமத்தின் மேற்பரப்பில் காணப்படும் பொருட்கள் தழும்புகள், உள்ளிட்டவற்றுக்கு பலவிதமான சிகிச்சைகள் அளிக்கப்படும். ஒரு சில சிகிச்சைகள் மேற்பரப்பில் மட்டுமே அதனுடைய விளைவை காண்பிக்கவும். உதாரணமாக ஃபேஷியல் செய்வதை வைத்துக் கொள்ளலாம். சருமம் பொலிவாகவும், பளிச்சென்றும் மாறும். ஆனால் சருமத்தின் உள்ளே இருக்கும் செல்கள் மற்றும் திசுக்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காது. அதே போல, முகப்பரு சிகிச்சை என்று வரும்போது மேற்பகுதியில் காணப்படும் பரு நீங்கினாலும், மீண்டும் பரு உருவாக்கும் எண்ணெய் பசை கிளாண்டுகள் சருமத்தின் உட்புற லேயர்களில் இருக்கும்.
மேலும், இது சருமத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுத்தாமல் மேற்பரப்பில் பயன்படுத்தப்படும் அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் சருமத்துக்கு உள்ளே இருக்கும் செல்கள் மற்றும் திசுக்களுக்கு சென்றடையும். இதன் மூலம் சருமம் உள்ளிருந்து பொலிவாகும். செல்கள் மற்றும் திசுக்கள் ஆரோக்கியமடையும் போது, சருமத்தின் மேற்புறத்தில் இருக்கும் தழும்புகள், மங்கு உள்ளிட்டவை நீங்கும்.
மைக்ரோ நீடிலிங் சிகிச்சையின் போது, அந்த ஊசி சருமத்தை துளையிடும் சமயம் , மூளைக்கு அது ஒரு காயமாக பதிவாகிறது. எனவே மூளை உடனடியாக சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை தூண்டி விடுகிறது. கொலாஜன் உற்பத்தியாகும் பொழுது சருமம் பளபளப்பாகவும், இளமையான தோற்றத்துடன், அதிக எலாஸ்டிசிட்டி கொண்ட தன்மையுடன் இருக்கும். எனவே இதனுடன் சேர்ந்து சருமத்திற்கு ஏற்ற சிகிச்சைகள் வழங்கப்படும் பொழுது அதனுடைய விளைவுகள் பல மடங்கு அதிகரிக்கும். இதனால் தான் ரேடியோ ஃப்ரீகுவன்ஸி அல்லது ஹைட்ரா ஃபேஷியல் உள்ளிட்ட சிகிச்சையுடன் மைக்ரோநீடிலிங் பயன்படுத்தப்படுகிறது.