முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » மெடிக்கல் ஃபேஷியல் vs சலூன் ஃபேஷியல்.. இரண்டில் எது உங்களுக்கு சரியாக இருக்கும்..?

மெடிக்கல் ஃபேஷியல் vs சலூன் ஃபேஷியல்.. இரண்டில் எது உங்களுக்கு சரியாக இருக்கும்..?

இங்கே மெடிக்கல் ஃபேஷியல் மற்றும் சலூன் ஃபேஷியல் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். இதனால் இரண்டில் எது உங்களுக்கு சரியானது என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும்.

  • 16

    மெடிக்கல் ஃபேஷியல் vs சலூன் ஃபேஷியல்.. இரண்டில் எது உங்களுக்கு சரியாக இருக்கும்..?

    நாம் அனைவருமே எப்போதும் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெறவே விரும்புகிறோம். இதற்கான சரியான வழி முறை, சரும பராமரிப்பு மற்றும் வழக்கமான அடிப்படையில் செய்து கொள்ளும் ஃபேஷியல்.

    MORE
    GALLERIES

  • 26

    மெடிக்கல் ஃபேஷியல் vs சலூன் ஃபேஷியல்.. இரண்டில் எது உங்களுக்கு சரியாக இருக்கும்..?

    பல டைப் ஃபேஷியல்கள் இருப்பதால் உங்கள் தேவைக்கேற்ப அல்லது உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற ஃபேஷியலை தேர்வு செய்வது சவாலாக இருக்கும். இங்கே மெடிக்கல் ஃபேஷியல் மற்றும் சலூன் ஃபேஷியல் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். இதனால் இரண்டில் எது உங்களுக்கு சரியானது என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும்.

    MORE
    GALLERIES

  • 36

    மெடிக்கல் ஃபேஷியல் vs சலூன் ஃபேஷியல்.. இரண்டில் எது உங்களுக்கு சரியாக இருக்கும்..?

    மெடிக்கல் ஃபேஷியல் என்பது உரிமம் பெற்ற மருத்துவ அழகியல் நிபுணர் (Medical aesthetician) அல்லது தோல் மருத்துவரால் (Dermatologist) செய்யப்படும் ஒரு ஸ்பெஷல் சிகிச்சையாகும். இந்த ப்ராசஸ் உங்கள் சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தவும், எக்ஸ்ஃபோலியேட் செய்ய மற்றும் புத்துணர்ச்சியூட்ட மெடிக்கல்-கிரேட் ப்ராடக்ட்ஸ் மற்றும் டிவைஸ்களை பயன்படுத்துகிறது. அதே போல மெடிக்கல் ஃபேஷியல்ஸ் பொதுவாக ஒவ்வொருவரின் குறிப்பிட்ட தோல் பிரச்சனைக்கு ஏற்ப கஸ்டமைஸ்டு செய்யப்படுகின்றன மற்றும் இவை மைக்ரோடெர்மாபிரேஷன், கெமிக்கல் பீல்ஸ் மற்றும் லேசர் தெரபி போன்ற சிகிச்சைகளை உள்ளடக்கியிருக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 46

    மெடிக்கல் ஃபேஷியல் vs சலூன் ஃபேஷியல்.. இரண்டில் எது உங்களுக்கு சரியாக இருக்கும்..?

    மெடிக்கல் ஃபேஷியல்: முகப்பருக்கள், வெயிலினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சரும சுருக்கங்கள் உள்ளிட்ட பல வகையான சரும பிரச்சனைகளுக்கு மெடிக்கல் ஃபேஷியல் நன்மை பயக்கும். இந்த வகை ஃபேஷியலில் பயன்படுத்தப்படும் மெடிக்கல்-கிரேட் ப்ராடக்ட்ஸ் மற்றும் டிவைஸ்கள் சருமத்தை ஆழமாக ஊடுருவி சென்று சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமின்ஸ் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. இவை சருமத்தை சரி செய்ய மற்றும் புத்துயிர் பெற உதவுகின்றன. தவிர மெடிக்கல் ஃபேஷியல் கொலாஜன் உற்பத்தியை தூண்ட உதவ கூடும். அதே போல மெடிக்கல் ஃபேஷியல் செய்து கொள்வதன் முக்கிய நன்மை என்னவென்றால், சரும பராமரிப்பில் விரிவான அறிவும், பயிற்சியும் கொண்ட உரிமம் பெற்ற மருத்துவ நிபுணர்களால் இந்த ஃபேஷியல் ப்ராசஸ் செய்யப்படுகின்றன நிபுணர்கள் என்பதால் ஒவ்வொருவரின் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய ஃபேஷியல் ப்ராசஸ் ட்ரீட்மென்ட்டை கஸ்டமைஸ் செய்யலாம் மற்றும் கூடுதல் சிகிச்சைகள் மற்றும் தயாரிப்புகளை பரிந்துரைக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 56

    மெடிக்கல் ஃபேஷியல் vs சலூன் ஃபேஷியல்.. இரண்டில் எது உங்களுக்கு சரியாக இருக்கும்..?

    சலூன் ஃபேஷியல்: மறுபுறம் சலூன் ஃபேஷியல் என்பது ஒரு ரிலாக்ஸிங் ஸ்பா ட்ரீட்மென்ட் ஆகும். இது பொதுவாக சருமம் மற்றும் தளர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இது பொதுவாக Pampering மற்றும் relaxation-ல் கவனம் செலுத்துகிறது. ஹை-குவாலிட்டியை பயன்படுத்தும் உரிமம் பெற்ற அழகியல் நிபுணரால் (aesthetician) இது செய்யப்படுகிறது. ஆனால் சருமத்தை சுத்தப்படுத்த மற்றும் எக்ஸ்ஃபோலியேட் செய்ய நான்-மெடிக்கல்-கிரேட் ப்ராடக்ட்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. சலூன் ஃபேஷியல்களில் ரிலாக்ஸ்சேஷனை மேம்படுத்த மாஸ்க்ஸ் மற்றும் மசாஜ்கள் போன்ற கூடுதல் சிகிச்சைகளும் இருக்கலாம். இந்த வகை ஃபேஷியல் சரும தோற்றத்தை மேம்படுத்தும் அதே நேரம் மன அழுத்தத்தை குறைக்க சிறந்த வழி. மேலும் இவை மெடிக்கல் ஃபேஷியலை விட குறைவான விலை கொண்டவை.

    MORE
    GALLERIES

  • 66

    மெடிக்கல் ஃபேஷியல் vs சலூன் ஃபேஷியல்.. இரண்டில் எது உங்களுக்கு சரியாக இருக்கும்..?

    உங்களுக்கு எது சரியானது..? மேற்கண்ட 2 ஃபேஷியலுக்கும் இடையே எதை தேர்வு செய்வது என யோசிக்கும் போது, உங்கள் சரும பிரச்சனைகள் மற்றும் உங்கள் பட்ஜெட்டை கருத்தில் கொள்வது அவசியம். உங்களுக்கு மருத்துவ தர தயாரிப்புகள் மற்றும் சாதனங்கள் தேவைப்படும் குறிப்பிட்ட சரும பிரச்சனைகள் இருந்தால் நீங்கள் மெடிக்கல் ஃபேஷியலை தேர்வு செய்யலாம். ஒருவேளை நீங்கள் விலை குறைவான அதே நேரம் ரிலாக்ஸிங்கை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் சலூன் ஃபேஷியலை தேர்வு செய்யாலாம். எதை தேர்வு செய்தாலும் அதனை செய்யும் நிபுணரின் அனுபவம் மற்றும் தகுதிகளை கருத்தில் கொள்ள வேண்டும்.

    MORE
    GALLERIES