பெண்கள் முக அழகிற்கு எவ்வளவு மெனக்கெடுக்கிறார்களோ? அதே அளவிற்கு நகங்களைப் பாதுகாக்கவும் அவர்கள் பெரும் முயற்சி செய்கிறார்கள். குறிப்பாக ஒருவரின் நகங்களை வைத்தே அவர்கள் எந்தளவிற்கு தங்களது உடலைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும். பலர் வீட்டிலேயே நகங்களை வெட்டுவது,சுத்தம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டாலும் தற்போது பெரும்பான்மையான பெண்கள் அழகு நிலையங்களுக்கு சென்று மெனிக்யூர் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டனர்.
இது நமது கைகளையும், கைவிரல்களை மற்றும் நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்களை நீக்கி விரல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. இதோடு விரல்கள் உள்ள வறட்சி மற்றும் சுருக்கங்கள் மறைகிறது. மெனிக்யூரின் போது செய்யப்படும் மசாஜினால் நகக்கண்களில் இரத்த ஓட்டம் அதிகமாவதோடு தொற்று எதுவம் இருந்தால் சுத்தப்படுத்திக் குணப்படுத்த உதவுகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகள் இருப்பதால் தான் பல பெண்கள் அழகுநிலையங்கள் சென்று அல்லது வீட்டிலேயே மெனிக்யூர் செய்துக் கொள்கிறார்கள்.
இவ்வாறு மெனிக்யூர் செய்வதால் இத்தனை நன்மைகள் உள்ளது என சமீப காலங்களாக பல செய்திகளை நாம் பார்த்து வருகிறோம்.. ஆனால் மெனிக்யூர் செய்தால் இந்த பாதிப்புகளை எல்லாம் நீங்கள் சந்திக்கக்கூடும் எனவும், உடனே இனி அழகுநிலையங்களுக்குச் சென்று நக பராமரிப்பு மேற்கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்கிறார் தோல் மருத்துவர் அக்னி குமார் போஸ். சோசியல் மீடியா வாயிலாகத் தெரிவித்துள்ள இந்த தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்படி என்ன தான்? அவர் கூறியுள்ளார் என்பது குறித்து நாமும் தெரிந்துக்கொள்வோம்.
மெனிக்யூர் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள்.. தோல் மருத்துவர் அக்னி குமார் போஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், விரல்களை அழகுப்படுத்துவதற்காக நீங்கள் மேற்கொள்ளும் மெனிக்யூர், கை நகங்களை வலுவிழக்கச் செய்கிறது. இவ்வாறு நீங்கள் அடிக்கடி செய்யும் போது தோல் புற்றுநோய் மற்றும் கைகளின் தோலின் ஏற்படும் வயதான அபாயத்தை அதிகரிக்கிறது என தெரிவித்துள்ளார். சில நேரங்களில் ஏற்படும் வெட்டுக்காயத்தால் நகங்களில் தொற்று மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது.
மெனிக்யூர் செய்யும் போது நகங்களின் ஆணி வேரைப் பிரித்தெடுக்கிறது. மேலும் ஜெல் அல்லது அக்ரிலிக் நெயில் பாலிஷ் உபயோகிக்கும் போது மோசமான நகத்தின் தரம் மற்றும் அமைப்பைப் பாதிக்கிறது. இதோடு உங்களது விரல்களில் செயற்கை நகங்களை நீங்கள் நீளமாக வைக்கும் போது, திடிரென உடைய நேரிட்டால் வலியோடு விரல்களின் ஆணி வேரும் பாதிக்கப்படுகிறது.