சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகைகளைப் போல அழகான மற்றும் ட்ரெண்டியான ஐ மேக்கப்களை தற்போதைய இளம் பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். எனவே யூ-டியூப்பில் கொட்டிக் கிடைக்கும் டூடோரியல்களைப் பார்த்து விதவிதமான ஐ மேக்கப்களை செய்து கொள்கின்றனர். ஆனால் என்ன தான் ஐ லைனர், மஸ்காரா, கிளிட்டர், ஐ லேஷ் என அனைத்தையும் பயன்படுத்தினாலும் கண்களுக்கு கவர்ந்திழுக்கும் மினுமினுப்பான தோற்றம் கிடைக்கவில்லை என ஏங்குவோருக்காக சில டிப்ஸ்களைக் கொட்னு வந்துள்ளோம்.
1. கண்களை தயார்படுத்துங்கள்: ஐ மேக்கப்பை ஆரம்பிப்பதற்கு முன்னதாக முகத்தை நன்றாக கழுவுங்கள். அதன் பின்னர் கண்களுக்கு கீழும், மேலும் உள்ள கருவளையங்கள் இருந்தால், அந்தப் பகுதிகளை மறைப்பதற்காக ப்ரைமர் மற்றும் கன்சீலரைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் உங்களுடைய ஐ ஷேடோவையும், கண் அழகையும் தனித்து காண்பிக்க முடியும்.
2. மஸ்காரா தேர்வில் கவனம்: பெண்களின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது அவர்களுடைய வசீகரமான கண்கள் தான். அதனால் தான் முகத்தில் கண்களுக்கான மேக்கப்பும், அதற்கான அழகு சாதனங்களும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. கண்களை இன்னும் கூடுதல் வசீகரமாக்க செயற்கை கண் இமைகள் பயன்படுகின்றன. செயற்கை கண் இமைகள் மற்றும் மஸ்காராவை பயன்படுத்தி கண்களை அழகுப்படுத்துவதற்கு முன்னதாக உங்களுடைய கண்மை எந்த வகையைச் சேர்ந்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒற்றை இமை, சிறிய மடிப்பு, பேரலல் மடிப்பு, குறுகலான மடிப்பு மற்றும் அதிக மடிப்பு என பல வகையான இமைகள் உள்ளன. எனவே அந்த வகைகளுக்கு ஏற்ப அதற்கான மஸ்காரா வகைகளை தேர்வு செய்ய வேண்டும்.
3. அழகை ஹைலைட் செய்யுங்கள்: ஒவ்வொருவரது கண்களும் வெவ்வேறு விதமான அழகைக் கொண்டவை எனவே உங்களுடைய கண்ணை அழகுபடுத்துவதற்கு முன்பு அதற்கான சிறந்த பார்ட் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். கீழ் கண் இமை கோடுகளைப் போலவே மேலே உள்ள கண் இமை கோட்டிற்கும் ஐ ப்ரோ பென்சிலை வைத்து அடர்த்தியாக வரைந்து கொள்வது கண் அழகை மேம்படுத்த உதவும்.
4. அடித்தளத்தை வலுவாக்குங்கள்: ஐ மேக்கப்பை ஆரம்பிக்கும் முன்பு என்ன மாதிரியான வடிவம் மற்றும் தோற்றத்தை கொடுக்க விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். கண் இமைகளின் மூலையில் இருந்து மேக்கப்பை தொடங்கி பறவையின் இறகைப் போன்ற வடிவத்தில் ஐ லைனர் வரையவும். வெளிர் அல்லது பழுப்பு நிற வண்ணங்களைத் தேர்வு செய்வது கண்களை மேலும் மெருகேற்ற உதவும்.