பவுடர் என்பது மேக்கப்பின் முக்கியமான ஒரு பகுதி ஆகும். நம் அன்றாட உடல் பராமரிப்பிலும் பவுடரை நாம் பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக கோடை காலத்தில் பவுடர் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. பவுடரில் மூன்று வகை உண்டு - லூஸ் ஃபேஸ் பவுடர், பிரஸ்டு பவுடர் (பவுடர் காம்பாக்ட் என்றும் அழைக்கப்படுகிறது) மற்றும் டால்கம் பவுடர்.
லூஸ் ஃபேஸ் பவுடர் சருமத்தின் நிறத்தை வெளிப்படுத்த உதவுகிறது. வெவ்வேறு சரும நிறத்திற்கு பொருந்தும் வகையில் இது பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இது மேக்கப்பின் இறுதியில் மென்மையான மற்றும் மேட் ஃபினிஷைத் தருகிறது. ஃபேஸ் பவுடர் நீங்கள் பயன்படுத்தும் ஃபௌண்டேஷனின் நிறத்தைக் காட்டிலும், ஒரு ஷேட் குறைவாக இருக்க வேண்டும்.
பிரஸ்டு பவுடர் அல்லது காம்பாக்ட் பவுடர் என்பது லூஸ் பவுடரைக் காட்டிலும் தடிமனாக இருக்கும் மற்றும் அதிக திடத்தன்மை கொண்டது. பிரஸ்டு பவுடர்களும் வெவ்வேறு ஷேடுகளில் கிடைக்கிறது. பெரும்பாலான இந்திய சரும நிறங்களுக்கு பெய்ஜ் ஷேட் ஏற்றதாக இருக்கும். டிரையல் & எரர் முறை மூலமாக உங்களுக்கான சரியான ஷேட் எது என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.
வெப்பமான, ஈரப்பதம் நிறைந்த வானிலையின் ஒரு பகல் நேரத்தில் மேக்கப் போடும்போது, பவுண்டேஷன் இல்லாமலே காம்பாக்ட் பவுடரை பயன்படுத்திக் கொள்ளலாம். கோடை காலத்தில் உங்கள் சருமத்திற்கு அவ்வப்போது புத்துணர்ச்சி அளிக்க உங்கள் ஹேண்ட் பேக்கில் வெட் டிஷ்யூக்கள் மற்றும் பவுடர் காம்பாக்ட் எடுத்து செல்ல மறக்காதீர்கள்.
ஏனெனில், ஒரு வேலை முகத்தில் முடி இருந்தால் அது நேராக தெரிய ஆரம்பிக்கும். ஆகவே, பஃபை அழுத்தி, கீழே மற்றும் வெளியே உருட்டவும். அதே நேரத்தில், அதிகமாக பயன்படுத்தி விடக்கூடாது. ஏனென்றால், கண்களுக்கு கீழே உள்ள மெல்லிய கோடுகளில் பவுடர் திட்டுதிட்டாக படிந்துவிடும். அதிகப்படியான பவுடரை பிரஷ் கொண்டு துடைத்து விட வேண்டும்.
வெயில் காலத்தில், ஃபௌண்டேஷனுக்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம். இதற்கு முதலில் ஒரு வெட் டிஷ்யூ அல்லது கிளென்சிங் பேட் கொண்டு முதலில் முகத்தை துடைத்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் பவுடர் காம்பாக்டில் உள்ள பிரஸ்டு பவுடரை பயன்படுத்தவும். சட்டென்று உங்கள் முகம் பளிச்சென்று ஃபிரஷ் ஆனதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.