முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கடலை மாவு ஃபேஷியல் ட்ரை பண்ணிருக்கீங்களா..? இந்த சம்மருக்கு சூப்பரான ஸ்கின்கேர் டிப்ஸ் இது..

கடலை மாவு ஃபேஷியல் ட்ரை பண்ணிருக்கீங்களா..? இந்த சம்மருக்கு சூப்பரான ஸ்கின்கேர் டிப்ஸ் இது..

முகத்தை பொலிவாக்க உங்களுக்கு கடலை மாவு இருந்தாலே போதும். இதில் ஏராளமான பயன்கள் இருப்பதாக அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

  • 18

    கடலை மாவு ஃபேஷியல் ட்ரை பண்ணிருக்கீங்களா..? இந்த சம்மருக்கு சூப்பரான ஸ்கின்கேர் டிப்ஸ் இது..

    சரும பாதுகாப்பிற்காக பியூட்டி பார்லர்கள் சிகிச்சை, சரும தயாரிப்புகள் மற்றும் வீட்டிலேயே செய்யக்கூடிய மாஸ்க்குகள் வரை பலவற்றை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சில வழிகள் மிகவும் கடினமானதாக இருக்கும். அதே போல, சில வழிகள் மிகவும் எளிமையானதாக இருக்கும். எளிய வழிகளை பின்பற்றி சிறந்த முறையில் உங்கள் முகத்திற்கு பொலிவான தோற்றத்தை தர சமையல் அறையில் உள்ள பொருட்களே போதும்.

    MORE
    GALLERIES

  • 28

    கடலை மாவு ஃபேஷியல் ட்ரை பண்ணிருக்கீங்களா..? இந்த சம்மருக்கு சூப்பரான ஸ்கின்கேர் டிப்ஸ் இது..

    முகத்தை பொலிவாக்க உங்களுக்கு கடலை மாவு இருந்தாலே போதும். இதில் ஏராளமான பயன்கள் இருப்பதாக அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். கடலை மாவை கொண்டு சிறப்பான முறையில் எப்படி ஃபேஷியல் செய்யலாம் என்பதை பற்றி இனி பார்ப்போம்.

    MORE
    GALLERIES

  • 38

    கடலை மாவு ஃபேஷியல் ட்ரை பண்ணிருக்கீங்களா..? இந்த சம்மருக்கு சூப்பரான ஸ்கின்கேர் டிப்ஸ் இது..

    கடலை மாவு கிளென்சிங்: ஃபேஷியல் செய்வதற்கு முன்னதாக உங்கள் முகத்தை சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு கிளென்சிங் செய்யலாம். இதன் மூலம் முகத்தில் அழுக்குகள், தூசுகள், பிசுக்குகள், போன்றவற்றை நீக்க முடியும். இதை செய்வதற்கு, ஒரு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் உளுத்தம் மாவு அல்லது கடலை மாவு, 1 டீஸ்பூன் தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு இந்த கலவையை உங்கள் முகம் முழுவதும் தடவி 20 நிமிடங்கள் உலர விடவும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.

    MORE
    GALLERIES

  • 48

    கடலை மாவு ஃபேஷியல் ட்ரை பண்ணிருக்கீங்களா..? இந்த சம்மருக்கு சூப்பரான ஸ்கின்கேர் டிப்ஸ் இது..

    சருமத்தை மென்மையாக்குதல் : முகத்தை மென்மையாக்க டோனர் முறையை பயன்படுத்தலாம். இதனால் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்குகள் நீங்கி விடும் மற்றும் முகத்தில் திறந்துள்ள துளைகளை மூடி விடும். இதை செய்ய ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் கடலை மாவு அல்லது உளுத்தம் மாவு, 1/2 டீஸ்பூன் மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கொள்ளவும். இதை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதி முழுவதும் தடவுங்கள். இந்த டோனரை 20 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவலாம்.

    MORE
    GALLERIES

  • 58

    கடலை மாவு ஃபேஷியல் ட்ரை பண்ணிருக்கீங்களா..? இந்த சம்மருக்கு சூப்பரான ஸ்கின்கேர் டிப்ஸ் இது..

    கடலை மாவு ஃபேஸ் ஸ்கிரப்: முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க இந்த ஃபேஸ் ஸ்கிரப் முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் கடலை மாவு அல்லது உளுந்து மாவு, 1 டீஸ்பூன் அரைத்த ஓட்ஸ், 2 டீஸ்பூன் சோள மாவு மற்றும் 1 டீஸ்பூன் பச்சை பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு இதை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவவும். 10 நிமிடங்கள் வரை மெதுவாக மசாஜ் செய்யவும். பிறகு சாதாரண நீரில் முகத்தை கழுவவும்.

    MORE
    GALLERIES

  • 68

    கடலை மாவு ஃபேஷியல் ட்ரை பண்ணிருக்கீங்களா..? இந்த சம்மருக்கு சூப்பரான ஸ்கின்கேர் டிப்ஸ் இது..

    கடலை மாவு ஃபேஸ் பேக்: பொலிவு குறைந்த முகத்திற்கென்று தனியான ஃபேஸ் பேக் உள்ளது. ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் உளுத்தம் மாவு அல்லது கடலை மாவு, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் பிரெஷ் கிரீம் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். அடுத்து இதை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவவும். 15-20 நிமிடங்களுக்கு இதை உலர விட்டு கழுவவும். இதுவே உங்கள் சருமம் உலர்ந்த வகையை சேர்ந்ததாக இருந்தால் அதற்கென்று தனியான முறை உண்டு. ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு பழுத்த வாழைப்பழம், 1 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 டீஸ்பூன் தேன் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும். பிறகு இந்த ஃபேஸ் பேக்கை உங்கள் முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் உலர விட்டு, பிறகு சாதாரண நீரில் கழுவவும்.

    MORE
    GALLERIES

  • 78

    கடலை மாவு ஃபேஷியல் ட்ரை பண்ணிருக்கீங்களா..? இந்த சம்மருக்கு சூப்பரான ஸ்கின்கேர் டிப்ஸ் இது..

    முகத்தில் உள்ள துளைகள் நீக்க: சிலருக்கு முகத்தில் உள்ள துளைகள் திறந்தே இருக்கும். இதை சரிசெய்ய சிறந்த ஃபேஸ் பேக் உள்ளது. ஒரு சின்ன பாத்திரத்தில் 1 டீஸ்பூன் உளுத்தம் மாவு மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து கொள்ளவும். அடுத்து இதில் சிறிது பால் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி சிறிது நேரம் உலர விட்டு, சாதாரண நீரில் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள துளைகள் விரைவில் மூடி கொள்ளும்.

    MORE
    GALLERIES

  • 88

    கடலை மாவு ஃபேஷியல் ட்ரை பண்ணிருக்கீங்களா..? இந்த சம்மருக்கு சூப்பரான ஸ்கின்கேர் டிப்ஸ் இது..

    எண்ணெய் பசை நிறைந்த சருமம்: சிலருக்கு எப்போதும் முகத்தில் எண்ணெய் வடிந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு சிறந்த வழி உள்ளது. இந்த ஃபேஸ் பேக் செய்ய ஒரு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் உளுந்து மாவு எடுத்து கொள்ளவும். பிறகு அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்க்கவும். இதை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவவும். இந்த ஃபேஸ் பேக் உங்கள் சருமத்தின் எண்ணெய் உற்பத்தியை குறைத்து, மென்மையாக வைக்க உதவும்.

    MORE
    GALLERIES